காதலியை வெளிநாட்டிற்கு அழைத்து உல்லாசம் அனுபவித்த காதலன்! திருமணத்திற்கு மறுப்பதால் ஆட்சியரிடம் புகார்!

By Dinesh TG  |  First Published Jun 6, 2023, 9:34 AM IST

புதுக்கோட்டையில் காதலிப்பதாக கூறி கர்ப்பம் ஆக்கிய காதலரை தன்னோடு சேர்த்து வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இளம்பெண் கண்ணீருடன் மனு அளித்துள்ளார்.
 


புதுக்கோட்டை மாவட்டம் சிலட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் இவருடைய மகள் ஜெகதீஸ்வரி இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் பரிக் என்பருடன் கடந்த 9 வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் காதலரின் பெற்றோர் காதலுக்கு இடையூறாக இருந்துள்ளனர்.

இதனிடையே, இம்ரான் ஃபரிக் மலேசியா சென்றுவிட்டார். அங்கிருந்து ஜெகதீஸ்வரியை தொடர்பு கொண்ட அவர், மலேசியாவுக்கு அவரையும் வர கூறியுள்ளார். இவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெகதீஸ்வரி கருப்பம் தரித்துள்ளதாக தெரிகிறது.



இதனை தெரிந்து கொண்ட இம்ரான், அவரை மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பி உள்ளார். தற்போது ஊருக்கு செல் பின்னர் அங்கு வந்து உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அவரை மலேசியாவில் இருந்து சொந்த ஊருக்கு அனுப்பி உள்ளார்

ஜெகதீஸ்வரி தனது தாய் வீட்டிற்கு வந்து நடந்ததை எல்லாம் கூறிய பிறகு ஜெகதீஸ்வரியின் பெற்றோர் அவரது காதலரின் வீட்டிற்கு சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறி மறுத்துவிட்டனர் இந்த நிலையில் இம்ரான் பஃரிக் ஜெகதீஸ்வரிடம் செல்போனில் பேசுவதை நிறுத்திவிட்டார்

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரி தாம் ஏமாற்றப்பட்டது அறிந்து கண்ணீர் மல்க என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், தனது காதலனோடு சேர்த்து வைக்க வேண்டும் அல்லது தன்னை ஆசை வார்த்தை கூறி குடும்பம் நடத்தி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Tap to resize

Latest Videos

click me!