பெரம்பலூர் மாவட்டத்தை அடுத்துள்ள அரணாரையைச் சேர்ந்தவர் சினிமா பட இயக்குநர் தமிழ் செல்வா என்ற செல்வராஜ். திமுக நிர்வாகியான இவர் சினிமா படங்களை இயக்குவதோடு பல்வேறு குறும்படங்களையும் இயக்கி விருதுகளையும் பெற்றுள்ளார்.
சினிமா பட இயக்குநரும், திமுக நிர்வாகியுமான செல்வராஜ் தனது பிறந்த நாளில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தை அடுத்துள்ள அரணாரையைச் சேர்ந்தவர் சினிமா பட இயக்குநர் தமிழ் செல்வா என்ற செல்வராஜ். திமுக நிர்வாகியான இவர் சினிமா படங்களை இயக்குவதோடு பல்வேறு குறும்படங்களையும் இயக்கி விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, பிரபல ரவுடிகள் பட்டியலிலும் இவர் பெயர் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தன்னுடைய திருமணம் மற்றும் பிறந்த நாளை கொண்டாட நனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடி உள்ளார். அப்போது, முகமூடி அணிந்த படி பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் செல்வராஜை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனால் ஹோட்டலில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.