
பின்னர் இரவு வெகுநேரமாகியும் மகன்கள் வீட்டிற்கு வராததால் ஜோதிமுத்து அவரது தம்பி ரத்தினராஜிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு மகன்களைப் பற்றி விசாரித்தபோது சரியாக பதில் கூறாததால், தனதுமகன்களை கண்டுபிடித்து தருமாறு விளாத்திகுளம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ரத்தின ராஜ் என்பவர் தனது அண்ணனின் மகன்களான சீமோன் அல்போன்ஸ்(12), எட்வின் ஜோசப் (8) ஆகிய இருவரையும் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது.
கொலைக்கான காரணத்தை விசாரிக்கும் பொழுது ஜோதி முத்துவின் இரண்டாவது மனைவி மகாலட்சுமி உடன் ரத்தின ராஜ் கள்ளக்காதல் வைத்துள்ளதை ஜோதி முத்துவின் முதல் மனைவி உஷாராணியின் மகன் சீமோன் அல்போன்ஸ் என்பவன் பார்த்து அதை தனது பெற்றோரிடம் சொல்லி கண்டித்துள்ளனர். இதனால் கோபம் அடைந்த ரத்தினராஜ் உஷா ராணியின் மகனையும் மகாலட்சுமியின் மகன் எட்வின் ஜோசப் ஆகிய இருவரையும் கிணற்றில் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார்.
அதன் பிரகாரம் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு கொலை செய்த ரத்தினராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றவாளி ரத்தின ராஜூக்கு தூத்துக்குடி மாவட்ட 2 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இரட்டை ஆயுள் தண்டனை சாகும் வரை சிறைவாசம் அனுபவித்தும் மற்றும் 200 ரூபாய் அபராதம் அளித்தும், மேற்படி தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க உத்தரவிட்டும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.