வீடு வீடாக சென்று ரகசிய கேமரா.. ஆன்டிகள், இளம்பெண்கள் குளிப்பதை அங்குலம் அங்குலமாக ரசித்த வாலிபர்கள்..!

By vinoth kumar  |  First Published Sep 21, 2022, 12:57 PM IST

சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் தங்கியுள்ளனர். இங்குள்ள பாத்ரூம் அருகே இன்று காலை சந்தேகப்படும்படியாக இரண்டு வாலிபர்கள் நின்றிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சென்று அவர்களிடம் விசாரித்த போது பதற்றம் அடைந்ததுடன் முன்னுக்கு பின் முரணாக பதில்களை தெரிவித்தனர்.


பணிக்குச் செல்லும் பெண்கள் தங்கியிருந்த வீட்டில், அவர்கள் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்து வந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் உள்ள ஒரு வீட்டில் பெண்கள் தங்கியுள்ளனர். இங்குள்ள பாத்ரூம் அருகே இன்று காலை சந்தேகப்படும்படியாக இரண்டு வாலிபர்கள் நின்றிருந்தனர். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் சென்று அவர்களிடம் விசாரித்த போது பதற்றம் அடைந்ததுடன் முன்னுக்கு பின் முரணாக பதில்களை தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போனை பறித்தபோது அதில் பதிவாகியிருந்த படங்களை உடனடியாக அழித்தனர். இதனால் அவர்கள் மீது மக்களுக்கு சந்தேகம் மேலும் வலுத்தது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கணவனை கழற்றிவிட்டு கல்லூரி தோழனுடன் உல்லாசம்.. மாமியாரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அசிங்கம் செய்த மருமகள்..

இதையடுத்து அவர்களை பிடித்துவைத்துக் கொண்டு வேளச்சேரி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் வந்து பொதுமக்கள் பிடியில் இருந்து இரண்டு வாலிபர்களை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் வேளச்சேரி பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(38), ஸ்ரீராம்(29) என்று தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த செல்போனை போலீசார் வாங்கி வீடியோக்கள் ஏதாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்தபோது அப்படி வீடியோ எதுவும் இல்லை.

இதையடுத்து ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலம் வீடியோக்களை திரும்ப எடுத்து பார்த்தபோது அதில் பல பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் ஏராளமாக பதிவு செய்யப்பட்டு இருப்பது பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பல பகுதிகளுக்கு சென்று வீடுகளில் செல்போனை ரகசியமாக வைத்து பெண்கள் குளிப்பதை வீடியோ பதிவு செய்து பின்னர் அவற்றை ரசித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து வெங்கடேசன், ஸ்ரீராம் ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். பெண்களை மிரட்டுவதற்காக அவர்கள் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தார்களா அல்லது வீடியோ எடுத்து நண்பர்கள் என பலருக்கும் அனுப்பினார்களா என்ற கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;-  மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற ஐடெக் விபச்சாரம்.. உள்ளே திறந்து பார்த்தால் அரைகுறை ஆடைகளுடன் 4 இளம்பெண்கள்.!

click me!