என்னை நீ லவ் பண்ணலன்னாலும் பரவாயில்லை! ஒரு தடவை என் கூட வந்து படு! மறுத்த பள்ளிமாணவி.. கழுத்தை அறுத்த இளைஞர்

Published : Aug 26, 2022, 01:53 PM ISTUpdated : Aug 26, 2022, 01:55 PM IST
என்னை நீ லவ் பண்ணலன்னாலும் பரவாயில்லை! ஒரு தடவை என் கூட வந்து படு! மறுத்த பள்ளிமாணவி.. கழுத்தை அறுத்த இளைஞர்

சுருக்கம்

காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.   

காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த சென்ன சமுத்திரம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மகன் விஜயகுமார். இவர் பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்த மாணவியின் தந்தை, பனப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மகளை தங்க வைத்துள்ளார். 

இந்நிலையில், விஜயகுமார் மாணவியை பார்ப்பதற்காக பனப்பாக்கம் கிராமத்திற்கு இரண்டு முறை சென்றுள்ளார். இதற்கிடையே ஒரு வாரத்திற்கு முன்பு தந்தை வீட்டுக்கு மாணவி வந்துள்ளார். நேற்று மாலை 4.30 மணிக்கு நிலத்துக்கு சென்று மாடுகளை ஓட்டி வர மாணவி சென்றுள்ளார்.

அப்போது மறைந்திருந்த விஜயகுமார், அவரிடம் சென்று தன்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்து ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு மறுத்த அவரை விஜயகுமார் கத்தியால் கழுத்தில் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், படுகாயமடைந்த மாணவி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டுக்கு சென்று தந்தையிடம் கூறியுள்ளார். உடனடியாக கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள விஜயகுமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை