இளம்பெண்ணுடன் நெருக்கம்? வளைச்சு வளைச்சு ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. வாலிபரை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.!

Published : Oct 08, 2022, 02:52 PM ISTUpdated : Oct 08, 2022, 02:53 PM IST
இளம்பெண்ணுடன் நெருக்கம்? வளைச்சு வளைச்சு ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. வாலிபரை வீடு புகுந்து தூக்கிய போலீஸ்.!

சுருக்கம்

இளம்பெண்ணை ஜான் கென்னடி ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். 

குமரியில் இளம்பெண்ணுடன் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம், நகை பறித்த வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

குமரி மாவட்டம் நட்டாலம் சரல்விளை பகுதியை சேர்ந்தவர் ஜான் கென்னடி. இவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி அந்த இளம்பெண்ணை ஜான் கென்னடி ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பயந்து போன இளம்பெண்ணும், தனது வீட்டுக்கு தெரியாமல் ரூ.1.50 லட்சம் வரை கொடுத்துள்ளார். மேலும் 2 பவுன் தங்க நகையும் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க;- போலீசுக்கு தண்ணிய காட்டிய ரவுடி ராக்கெட் ராஜா.. ஸ்கெட்ச் போட்டு தூக்கி கோவை சிறையில் அடைப்பு..!

ஆனால் தொடர்ந்து ஜான் கென்னடி பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் பணம் இல்லை என்று கூறி, போன் நம்பரை இளம்பெண் பிளாக் செய்தார். தனது போன் நம்பரையும் அந்த பெண் மாற்றியுள்ளார். புதிதாக மாற்றிய போன் நம்பரை ஜான் கென்னடி எப்படியோ தெரிந்து கொண்டு மறுபடியும் பணம் கேட்டு மிரட்டியதாக் தெரிகிறது.

பணம் தரவில்லை என்றால் ஆபாச வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், பதறிப்போன பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் ஜான்கென்னடி பெண்ணிடம் மிரட்டி பணம் பறித்தது உறுதியானது. இதனை தொடர்ந்து ஜான்கென்னடியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க;-  தங்கச்சி கணவருடன் கள்ளக்காதல்.. உல்லாசம்.. தடையாக இருந்த கணவர் கொலை.. கூலிப்படையை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!