தங்கச்சி கணவருடன் கள்ளக்காதல்.. உல்லாசம்.. தடையாக இருந்த கணவர் கொலை.. கூலிப்படையை சேர்ந்த பாஜக பிரமுகர் கைது

By vinoth kumar  |  First Published Oct 8, 2022, 12:45 PM IST

இந்த விவகாரம் அறிந்த வெற்றிவேல் மனைவி கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதல் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு வெற்றிவேல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் வசித்துள்ளார். 


ஆரணி அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படை உதவியுடன் கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் தொடர்பாக பாஜக பிரமுகர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த விஏகே நகர் பகுதியில் வசித்தவர் வெற்றிவேல்(42) ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது, மனைவி ரேவதி(32). இவர்களுக்கு, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கடந்த 6ம் தேதி அதிகாலை வீட்டில் வெற்றிவேல் மயங்க நிலையில் இருந்துள்ளார். உடனே அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, மனைவியிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக வகையில் பதிலளித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- என் புருஷன நினைச்சு தான் நீங்க இரவில் தூங்கணும்.. மாணவிகளை மருமகளாக பாவித்த ஆசிரியைக்கு ஆப்பு..! 

இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவலை போலீசாரிடம் கூறியுள்ளார். அதில், கடந்த 2016ல் வெற்றிவேலின் புதுவீடு கட்டும் பணியை அவரது தங்கை கணவர் நாகராஜ் செய்துள்ளார். அப்போது, அவருக்கும் ரேவதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் அறிந்த வெற்றிவேல் மனைவி கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதல் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு வெற்றிவேல் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று குடும்பத்துடன் வசித்துள்ளார். கடந்த மே மாதம் கள்ளக்காதலை கைவிடும்படி ரேவதியை அடித்துள்ளார். இதனால், கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இதனிடையே, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். ரேவதி தான் திருந்தி விட்டது போல் நடித்து வீட்டிற்கு வந்துள்ளார். கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளார். நள்ளிரவில் கள்ளக்காதலன் நாகராஜ், பாஜக பிரமுகர் ராஜேஷ், ரேவதி ஆகிய 3 பேர் சேர்ந்து, வெற்றிவேலை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மறுநாள் கணவர் மயக்க நிலையில் இருப்பதாக அவரது உறவினர்களுக்கு தெரிவித்தார். அவர்கள் ஆரணி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதுதான் இறந்தது தெரியவந்தது.  இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க;-  காலில் விழுந்து கெஞ்சிய மனைவி, மாமியார்.. விடாமல்.. வீடு புகுந்து மனைவி கண்ணெதிரே பிரபல ரவுடி வெட்டி படுகொலை.!

click me!