நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் அதிகாலையில் சாம்பார் மணி உள்ளிட்ட இரண்டு பேர் மதுபானங்களை திடிருடிக்கொண்டிருந்தனர்.
கூடலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்ற திருடனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குந்தலாடி பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையில் அதிகாலையில் சாம்பார் மணி உள்ளிட்ட இரண்டு பேர் மதுபானங்களை திடிருடிக்கொண்டிருந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடதத்திற்கு விரைந்த போலீசார் சாம்பார் மணியை பிடிக்க முயன்ற போது கத்தியால் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, போலீசார் தற்காப்புக்காக காலில் துப்பாக்கியால் சுட்டு குற்றவாளிகளை பிடித்துள்ளனர். சுடப்பட்ட கொள்ளையன் சாம்பார் மணிக்கு தொடையில் குண்டு பாய்ந்து கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இரண்டு காவலர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பிச்சென்ற மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.