தன்னுடன் கள்ளக் காதலில் இருந்த இளைஞர் திருமணத்துக்குத் தயாரானதை பொறுக்க முடியாத பெண் அவர்மீது சூடான பாமாயிலைக் கொட்டி ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார்.
ஈரோடு மாவட்டம் பவானியில் வர்ணபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். 26 வயதாகும் இவர் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவருக்கு மீனா தேவியுடன் திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
மீனா தேவி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது தன்னுடன் படித்த கணவரின் உறவினரான கார்த்திக் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். ஆனால், குடும்பத்தினர் பூபதியுடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்ததால் அவரை மணந்திருக்கிறார். இருப்பினும் கார்த்திக் பூபதியின் வீட்டுக்குச் சென்று மீனா தேவியுடன் பழக்கத்தைத் தொடர்ந்து வந்தார்.
Same Sex Marriage: தன்பாலின திருமணத்தை ஏற்க முடியாது! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
இந்நிலையில், கார்த்திக்கின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதுபற்றி தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த மீனா தேவி கார்த்திக்கை தன் வீட்டுக்கு அழைத்துள்ளார். தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை எப்படி கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று கார்த்திக்குடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது ஆத்திரத்தை அடக்க முடியாத மீனா தேவி சமையல் அறையில் அடுப்பில் ஏற்றியிருந்த எண்ணெயை கார்த்திக் மீது கொட்டினார். இதில் அவருக்கு கழுத்து, முகம், கை, தோள்பட்டை என உடலின் பல பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவர் படுகாயத்துடன் தன் பைக்கில் மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளார்.
என்னை குழி தோண்டி புதைப்பதில் காங்கிரஸ் மும்முரமாக உள்ளது: பிரதமர் மோடி
15 சதவீதம் தீக்காயம் அடைந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் பற்றி அறிந்த பவானி காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர்.
கார்த்திக் கொடுத்த வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் மீனாதேவியை கைது செய்ய முடிவு செய்தனர். காவல்துறையினர் சென்றபோது மீனாதேவி வீட்டில் இல்லை. கைது செய்யப்படுவோம் என்று பயந்த மீனாதேவி கருங்கல்பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் தஞ்சம் புகுந்திருப்பது காவல்துறையினருக்குத் தெரியவந்தது. அங்கு சென்று அவரைக் கைது செய்த போலீசார் அவரை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்துள்ளனர்.
From the India Gate: ராஜஸ்தான் ராஜா ராணி போட்டியும் கர்நாடக தேர்தல் வியூகங்களும்