திருடறது மட்டும் தான் பிளான்? சொகுசு ஹோட்டலில் ரூம் போட்டு ஏடிஎம் மையங்களில் கைவரிசை... பக்கா பிலானோடு வந்த பல்கேரிய திருட்டு கும்பல்!!

By sathish kFirst Published Jul 21, 2019, 1:08 PM IST
Highlights

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவிகளை வைத்து திருடிய பல்கேரிய நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 
 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவிகளை வைத்து திருடிய பல்கேரிய நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 

சென்னை ஓ.எம்.ஆர் ரோட்டில் உள்ள ஹாலிடே எனும் சொகுசு ஹோட்டலில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் தங்கியிருப்பதாகவும் அவர்கள் வெளியே போகும் போது புதுவிதமான மின்னணு கருவிகளை வைத்து கொண்டு செல்வதாகவும் அவர்களது நடவடிக்கைகளும் சந்தேகமாக இருப்பதாகவும் கண்ணகி நகர் போலீசாருக்குத் ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் கடந்த மாதம் ஏடிஎம் எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணத்தைத் திருடிய பல்கேரிய நாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தீவிரமாக கிரங்கிய போலீசார், ஹாலிடே ஹோட்டலுக்கு விரைந்தனர். அங்கு தங்கியிருந்த பல்கேரியா நாட்டைச் சேர்ந்த லிபோமிர், போரிஸ் , நிக்கோலே,  ஆகியோரின் வைத்திருந்த சூட்கேசில் சோதனையிட்டபோது சுமார் 40க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் கார்டுகள், 7.5 லட்ச ரூபாய் , 10 ஆயிரம் டாலர் , போலி கார்டு தயாரிக்கும் மெஷின், லேப்டாப் மற்றும் செல்போன்கள் 3 சூட்கேஸ் ஆகியவை இருந்தன, மேலும் அவர்கள் பல்கேரியா செல்வதற்காக வாங்கப்பட்ட விமான பயணச்சீட்டையும் கைப்பற்றினர்.

பல்கேரியாவில் இருந்து வந்து ஏ.டி.எம். இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்திவர்கள், குறிப்பாக பல்கேரிய நாட்டவர்களின் வங்கிக் லட்சக்கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் திருடி வந்தது தெரியவந்துள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் சுமார் 18 லட்சம் ரூபாய் வரை திருடிய இவர்கள், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். மூவரும் கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், விசாரணைக்குப் பின் மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அதை பல்கேரிய தூதரகத்துக்கு அனுப்பவைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

click me!