சாக்கடையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய நாய்கள்... நெகிழவைக்கும் சம்பவம் !!

By sathish kFirst Published Jul 21, 2019, 10:56 AM IST
Highlights

ஹரியானா மாநிலத்தில் இப்போது அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதிதாக பிறந்த பெண் குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி சாக்கடையில் வீசி விட்டு சென்றிருக்கிறார். அந்த பிஞ்சு குழந்தையை நாய்கள் இழுத்துப்போட்டு காப்பாற்றியிருக்கின்றன.

ஹரியானா மாநிலத்தில் இப்போது அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. புதிதாக பிறந்த பெண் குழந்தையை பிளாஸ்டிக் பையில் சுற்றி சாக்கடையில் வீசி விட்டு சென்றிருக்கிறார். அந்த பிஞ்சு குழந்தையை நாய்கள் இழுத்துப்போட்டு காப்பாற்றியிருக்கின்றன.

ஹரியானாவின் கைதால் நகரில் இருந்த பாதாள சாக்கடைக்குள் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு ரத்தவாடையோடு கிடந்ததை பார்த்த அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் மோப்பம் பிடித்து வெளியே இழுத்துப்போட்டு சத்தமாக குறைத்துக்கொண்டிருந்தன. அதைப்பார்த்து அந்தப்பக்கமாக கடந்து சென்ற சிலர் போலீசில் தகவல் கூறினர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. பிறந்து ஒரு சில மணி நேரமே ஆன அந்த குழந்தையின் எடை 1,100 கிலோ கிராம் மட்டுமே இருக்கிறது. பெண் குழந்தை என்பதற்காக வீசி சென்றார்களா? அல்லாது முறை தவறி பிறந்த குழந்தையாக இருக்காலாமா யார் அந்த பெண்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

விசாரணையில், அங்கிருந்த சிசிடிவி வீடியோவைஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத இளம் பெண் ஒருவர், ஒரு பெரிய சாக்கு பையில் இருந்து ஒரு பொருளை எடுத்து வீசுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோ பட்சியிலிருந்து அந்த பெண்ணின் போட்டோவையும், அந்த பெண்ணைப்பற்றிய விபரங்களையும் குழந்தையின் போட்டோவைப்போட்டு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.  

click me!