ட்ரைவருடன் காதல்.. ஆபாச வீடியோ எடுத்து விடிய விடிய மிரட்டி பலாத்காரம்.. அதிர்ச்சி சம்பவம் !

Published : May 30, 2022, 01:09 PM ISTUpdated : May 30, 2022, 01:10 PM IST
ட்ரைவருடன் காதல்.. ஆபாச வீடியோ எடுத்து விடிய விடிய மிரட்டி பலாத்காரம்.. அதிர்ச்சி சம்பவம் !

சுருக்கம்

இருவரும் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு ஜாலியாக சென்று வந்துள்ளனர். தொடர்ந்து அப்துல்ஹமீது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை உக்கடத்தில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

கோவை செட்டிபாளையத்தை சேர்ந்த 22 வயது இளம் பெண், அதே பகுதி உள்ள தனியார் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலை செய்யும் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்சில் தினமும் வேலைக்கு செல்வது வழக்கம். அப்போது பஸ் டிரைவர் அப்துல் ஹமீது (26) என்பவருடன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.பின்னர் நெருக்கமாக இருந்தனர். இருவரும் ஊட்டி உள்ளிட்ட இடங்களுக்கு ஜாலியாக சென்று வந்துள்ளனர். தொடர்ந்து அப்துல்ஹமீது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை உக்கடத்தில் உள்ள ஒரு லாட்ஜில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படத்தை அப்துல் ஹமீது செல்போனில் எடுத்துள்ளார். தொடர்ந்து இளம்பெண்ணை மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்துல் ஹமீதிடம் கேட்டுள்ளார்.  அதற்கு அவர் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். பின்னர் அவர் குறித்து விசாரித்தபோது அப்துல் ஹமீது ஏற்கனவே திருமணமானவர் என்றும் அதனை மறைத்து தன்னுடன் பழகி ஏமாற்றியது தெரிய வந்தது. 

இதுகுறித்து இளம்பெண் அப்துல் ஹமீதிடம் கேட்டபோது அவர், நெருக்கமாக இருந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் கோவை செட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குனியமுத்தூர் செந்தமிழ் நகரை சேர்ந்த அப்துல் ஹமீதை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : Rajya Sabha Elections : 18 வருஷம் ஆச்சு.. எம்.பிக்கு கூட எனக்கு தகுதி இல்லையா ? கடுப்பான நடிகை நக்மா !

இதையும் படிங்க : கணவன் கண்முன்னே கள்ளகாதலனுடன் மனைவி உல்லாசம்.. வாழைத்தோப்பில் கொன்று புதைத்த சம்பவம் 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!