ஆர்டர் பண்றது சிக்கன் 65, ஆனால் இஸ்லாமியர் கொண்டுவரக்கூடாது...!! மதவெறி நபருக்கு ஆப்பு வைத்த ஸ்விகி...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 25, 2019, 6:11 PM IST
Highlights

உணவு கொடுக்க வந்தவர் இஸ்லாமியர் என்பதை தெரிந்து கொண்ட கட் அண்ட் ரைட் ஆசாமி, உணவை வாங்க மாட்டேன் என்று திருப்பி அனுப்பியுள்ளார். இதனையடுத்து அந்த நபர் மீது ஸ்விகி நிறுவன பிரதிநிதியான முதாசிர் சுலைமான் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இஸ்லாமியர் என்பதால் ஸ்விகி நிறுவன டெலிவரி பாயிடம் உணவை வாங்க மறுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும்  ஆப்பான ஸ்விகி மூலம், சிக்கன் 65 ஆர்டர் செய்துள்ளார். மேலும் அதனை தனக்கு டெலிவரி செய்யும் நபர் இந்துவாக மட்டுமே இருக்க வேண்டும் என்று ஸ்டிரிக்ட் ஆர்டர் போட்டுள்ளார். 

ஆனால் உணவு டெலிவரி செய்வது கஸ்டமர் உள்ள ஏரியா,  மற்றும் அந்த பகுதியில் உள்ள டெலிவரி  செய்யும் நபரை பொருத்தது என்பதால், ஸ்விகி நிறுவனம் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை டெலிவரி செய்ய அனுப்பியது.உணவு கொடுக்க வந்தவர் இஸ்லாமியர் என்பதை தெரிந்து கொண்ட கட் அண்ட் ரைட் ஆசாமி, உணவை வாங்க மாட்டேன் என்று திருப்பி அனுப்பியுள்ளார். இதனையடுத்து அந்த நபர் மீது ஸ்விகி நிறுவன பிரதிநிதியான முதாசிர் சுலைமான் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளஇன்ஸ்பெக்டர்ஸ்ரீனிவாஸ், 

ஸ்விகி  நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட புகாரைக் கொண்டு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.இதேபோன்ற சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியது, அதில் ஸ்மோடோவில் உணவு ஆர்டர் செய்த நபர்  ஒருவர், முஸ்லீம் இளைஞர் டெலிவரி செய்த உணவை வாங்க மறுத்த சம்பவம் இந்தியாவையே அதிரவைத்தது. 

என்னதான் இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்றாலும், உணவில் மதத்தை கொண்டு வந்த காலம் போய், உணவை கொண்டு வருபவரிடம் மதம் பார்க்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டோம் என்பது வேதனை.

click me!