ஒப்பந்தக்காரர் மனைவியோடு தொழிலாளி உல்லாசம்..! பீரில் விஷம் கலந்து கொடூர கொலை..!

By Manikandan S R S  |  First Published Oct 25, 2019, 4:10 PM IST

கட்டட ஒப்பந்தக்காரரின் மனைவியோடு கள்ள உறவு வைத்திருந்த தொழிலாளி பீரில் விஷம் கலந்து கொல்லப்பட்டிருக்கிறார்.


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவரது நண்பர்கள் விஜய்குமார், அஜித்குமார். இவர்கள் மூவரும் கட்டட தொழிலாளிகள். கட்டட ஒப்பந்த தொழில் பார்த்து வரும் கனகராஜ் என்பவரிடம் கடந்த 10 வருடங்களாக வேலைபார்த்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

சத்யராஜுக்கும் கனகராஜின் மனைவிக்கும் கள்ள உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்து கனகராஜ் அவரது மனைவியை கண்டித்திருக்கிறார். சத்யராஜ் மீதும் கடுமையான ஆத்திரத்தில் இருந்துள்ளார். மற்ற தொழிலாளர்களான விஜய்குமார் மற்றும் அஜித்குமாரிடம் இதுகுறித்து கூறி வேதனை அடைந்துள்ளார். இந்தநிலையில் சத்யராஜை கொலை செய்து விட மூன்று பேரும் முடிவெடுத்துள்ளனர்.

இதற்கு சதித்திட்டம் தீட்டிய அவர்கள், பீரில் விஷம் கலந்து சத்யராஜிற்கு கொடுத்துள்ளனர். பின்னர் அவரது உடலை ஆந்திர மாநிலம் குப்பம் அருகே இருக்கும் வனப்பகுதியில் வீசியிருக்கின்றனர். இதனிடையே அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்ததை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திய போது, அது சத்யராஜ் என்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவர் பணிபுரிந்த இடத்தில் சென்று காவல்துறையினர் விசாரணை செய்த போது தான், சத்யராஜ் கொலை செய்யப்பட்ட தகவல் தெரிய வந்தது. கனகராஜ், விஜயகுமார், அஜித்குமார் ஆகிய மூன்று பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர். 

click me!