மனைவிக்கு போன் செய்து வீட்டுக்கு வந்து பிள்ளைகளை கவனிக்காமல் இப்படி செய்வது நியாயமா? என கேட்டுள்ளார். அப்போது என்னை கேள்வி கேட்க நீ யார்? எனக்கேட்டு தகராறு ஏற்பட்டது.
எந்த நேரமும் ஓயாமல் செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவியை கழுத்தை அறுத்து கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(36). கார் ஓட்டுநர். இவரது மனைவி பச்சையம்மாள் (30). இவர்களுக்கு திவ்யா, கதிர்வேல் என 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில். மனைவி பச்சையம்மாள் அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். இதுதொடர்பாக கணவர் கேட்டால் சரிவர பதில் சொல்வதில்லை. இதனால் மனைவியின் நடத்தை கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க;- அடிக்கடி வெளியூர் போன கணவன்.. தனிமையில் வாடிய மனைவி.. பக்கத்து வீட்டு பையனை வீட்டுக்கே கூட்டிவந்த அசிங்கம்.
கடந்த 2 நாட்களுக்கு முன் கணவனிடம் சண்டைபோட்டுக்கொண்டு பச்சையம்மாள் கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மனைவிக்கு போன் செய்து வீட்டுக்கு வந்து பிள்ளைகளை கவனிக்காமல் இப்படி செய்வது நியாயமா? என கேட்டுள்ளார். அப்போது என்னை கேள்வி கேட்க நீ யார்? எனக்கேட்டு தகராறு ஏற்பட்டது.
இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கொரால்பாக்கம் கிராமத்திற்கு பைக்கில் சென்று மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அரிவாளுடன் போளூர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சுரேஷ் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- போதையில் 140 கிலோ மீட்டர் ஸ்பீடு!தூக்கி வீசப்பட்ட பெண் IT ஊழியர்கள் பலி!விபத்தை ஏற்படுத்தியவர் யார் தெரியுமா?