அடிக்கடி வெளியூர் போன கணவன்.. தனிமையில் வாடிய மனைவி.. பக்கத்து வீட்டு பையனை வீட்டுக்கே கூட்டிவந்த அசிங்கம்.
மனைவி பக்கத்து வீட்டு இளைஞனுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
மனைவி பக்கத்து வீட்டு இளைஞனுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக்காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகின்றன. இந்த வரிசையில் கணவன் அடிக்கடி வெளியூர் சென்று வந்த நிலையில் மனைவி தனது தனிமையை போக்க பக்கத்து வீட்டு இளைஞனுடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது கணவனுக்கு தெரிய வந்ததை அடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது, ஒருகட்டத்தில் மனைவியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த கணவன், மனைவியை கத்தியால் குத்தி செய்துள்ள கொடூரம் நடந்துள்ளது. பின்னர் 100க்கு போன் செய்து மனைவியை யாரோ கொலை செய்து விட்டதாக கூறிய நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்ததில் மொத்த கிளைமாக்ஸ்சும் தலைகீழாக மாறியது.
முழு விவரம் பின்வருமாறு:- மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ராஜேஷ் என்ற நபர் வசித்து வருகிறார், சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜேஷ் புனியா பாய் என்ற சூரியவன்ஷி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை சில வருடங்கள் மகிழ்ச்சியாகவே இருந்தது. தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சொந்தமாக தொழில் செய்து வரும் ராஜேஷ் அடிக்கடி வெளியூர் சென்று வந்தார், அப்போது மனைவி புனியா பாய் வீட்டில் தனிமையில் இருந்து வந்தார். அப்போது பக்கத்து வீட்டு வாலிபருடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.
கணவர் வெளியூர் போகும் போதெல்லாம் அந்த இளைஞனை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் மனைவியின் தகாத உறவு கணவனுக்கு தெரிய வந்தது. இதனால் மனைவியை பலமுறை அவர் எச்சரித்தார், தனது போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என அவர் மனைவிக்கு அட்வைஸ் கூறிவந்தார்.
ஆனால் மனைவி அதைப் பொருட்படுத்தவில்லை, இதனால் ஒரேயடியாக மனைவியை தீர்த்துக்கட்ட கணவன் ராஜேஷ் திட்டமிட்டார். இதற்காக சமயம் பார்த்து காத்திருந்தார். இம்மாதம் கடந்த 14ஆம் தேதி காலை குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு சென்ற பின்னர், மனைவியை அவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
மனைவியை கொன்று விட்டு சிறிது நேரம் வீட்டிலேயே இருந்த அவர், திடீரென வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து, அய்யோ எனது மனைவி புனியாவை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டார்கள் என கூறி கதறினார், உடனே 100 க்கு போன் செய்து எனது மனைவியை யாரோ கொன்று விட்டனர், உடனே வாருங்கள் என கதறினார், சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்,
போலீஸ் விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார் ராஜேஷ், இதனால் ராஜேஷ்மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை அவர்கள் பாணியில் விசாரித்தனர். அப்போது மொத்த உண்மையையும் அவர் கக்கினார். மனைவி பக்கத்துவீட்டு இளைஞனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார் என்றும், அதனால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.