
நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தீராத சந்தேகம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அழகர்சாமி நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரபா (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் நடத்தை மீது ராஜேஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு திடீரென பிரபா தற்கொலைக்கு முயன்றதாக அவரது கணவர் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு பிரபாவை சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படிங்க;- "என் கொழுந்தன் இல்லாம எனக்கு வாழ்க்கை இல்ல" .. - கள்ளகாதலால் கணவரின் தம்பியோடு தற்கொலை செய்து கொண்ட பெண் ..
கொலை
இந்நிலையில், பிரபாவின் தந்தை ஜெயராமன் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், பிரேத பரிசோதனை முடிவில் பிரபா தாலிக்கயிற்றால் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டது உறுதியானது.
நாடகமாடிய கணவர்
இதனையடுத்து, கணவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடதத்தியதில் பிரபாவை கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். இதனையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தாலி கட்டிய மனைவி கணவர் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு நாடகாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- அண்ணன் இல்லாத நேரத்தில் அண்ணியுடன் உல்லாசமாக இருந்த நண்பன்... மைத்துனரின் பகீர் வாக்குமூலம்!