சீர்காழியில் பல லட்சம் மதிப்புள்ள முருகன் சிலை மாயம்!!. மீண்டும் தலை தூக்கிய சிலை கடத்தல் கும்பல்.!!

By Thiraviaraj RMFirst Published Feb 17, 2020, 10:55 AM IST
Highlights

பிரணவ மந்திரத்தை பிரம்மன் மறந்தபோது முருகப்பெருமான் அவருக்கு எடுத்துரைத்த கோவிலில் பல லட்சம் மதிப்புள்ள சிலைகள் திருடு போய் இருக்கிறது.இச்சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கிறது.

T,Balamurukan

பிரணவ மந்திரத்தை பிரம்மன் மறந்தபோது முருகப்பெருமான் அவருக்கு எடுத்துரைத்த கோவிலில் பல லட்சம் மதிப்புள்ள சிலைகள் திருடு போய் இருக்கிறது.இச்சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கிறது.

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கீழ் பழனி என்றழைக்கப்படும் கொண்டல் குமார சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமந்துள்ளது.இங்கு வள்ளி, தெய்வானை, முருகப்பெருமான் ஆகிய உற்சவ மூர்த்தி ஐம்பொன் சிலைகள் இருந்தன. இதை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 அங்கிருந்த ஒவ்வொரு சிலையும் சுமார் முப்பத்தைந்து கிலோவுக்கு மேல் எடை கொண்டதாம். பழமையான  ஐம்பொன் சிலைகள் என்பதால் அதன் விலை எக்கச்சக்கம் என்கிறார்கள். அங்கே தான் பிரணவ மந்திரத்தை பிரம்மன் மறந்தபோது முருகப்பெருமான் ஸ்டார்ட் செய்த இடம் என்கிறார்கள். இதன்காரண்மாக பிழை  நீங்க பிரம்மதேவன் இக்கோயிலில் வழிபட்டதாக  வரலாறு சொல்லுகிறது.5 ஐம்பொன் சிலைகளில் 3 சிலைகளை மட்டுமே மர்ம கும்பல் திருடிச் சென்றிருக்கிறது.காணாமல் போன சிலைகள் ஒவ்வொன்றும், முருகப் பெருமான் சிலை இரண்டரை அடி உயரமும் , வள்ளி, தெய்வானை சிலைகள் ஓன்றரை அடி உயரமும் கொண்டதாம். இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி யாக பொன்மாணிக்கவேல் இருந்த போது சிலை திருட்டு கும்பல் கூனிபோய் கிடந்தது. தற்போது மீண்டும் தலைதூக்கியிருக்கிறது திருட்டு கும்பல்.
 

click me!