100 சதவிகிதம் இதில் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பு இல்லை ... கோவை எஸ்.பி. பாண்டியராஜன் அதிரடி!!

By sathish kFirst Published Mar 12, 2019, 12:57 PM IST
Highlights

100 சதவிகிதம் இதில் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பு இல்லை. இந்த வழக்கு குறித்து கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். 

பொள்ளாச்சி இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை வழக்கில் நொடிக்கு நொடி வெளியாகும் பல திடுக்கிடும் தகவல்கள் தமிழகத்தையே நிலைக்குளையச் வைத்துள்ளது. இந்த கும்பல் நண்பர்களின் உறவுக்கார பெண்கள், பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள், கல்லூரி படிக்கும் பணக்கார பெண்களை குறி வாய்வைத்து நேரிலும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு, நட்பாகி, பின் காதல் செய்து ஏமாற்றி இருக்கிறார்கள். காதலை காரணம் காட்டி பலவந்தமாக பலத்தாகரம் செய்துள்ளது விசாரணையில் தெரிந்துள்ளது.

அதுமட்டுமல்ல, அப்படி பெண்களுடன் உல்லாசம் இருக்கும் பொது வீடியோ எடுத்து மிரட்டி மிரட்டியே திரும்பாத திரும்ப வரவழைப்பார்களாம். இவர்களது போனில், சுமார் 1500 வீடியோக்கள் இருந்தது போலீசாரையே மிரளவைத்ததாம், தமிழகத்தில் க்ரைம் ஹிஸ்ட்ரியில் நடந்ததே இல்லை ஏன் இந்தியாவிலேயே இப்படி ஒரு க்ரைம் வாய்ப்பே இல்லை என கதிகலங்கிப்போனார்களாம்.

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த முக்கிய புல்லலிகள் சிலருக்கு தொர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில்,  தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவி வந்தது. 

இந்தநிலையில், சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி அவதூறு பரப்பப்படுகிறது. திமுக.தான் அதற்கு காரணம் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார். மேலும், சிங்கை ராமச்சந்திரன், டி.ஜி.பி அலுவலகத்திலுள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருக்கிறார். புகார் அளிக்கும்போது பொள்ளாச்சி ஜெயராமனும் உடன் சென்றார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு குறித்து கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  இந்த கும்பல் பணம் பறித்துள்ளது தொடர்பாக யாரேனும் புகார் கொடுத்தால், கூடுதல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்படும். 100 சதவிகிதம் இதில் அரசியல் வாரிசுகளுக்குத் தொடர்பு இல்லை.  

மேலும், கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்குத்தான் இதில் தொடர்பிருக்கிறது. அந்த கும்பலின் தலைவன் திருநாவுக்கரசு கல்லூரிப் பருவத்திலிருந்தே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.  எத்தனை பெண்கள் என்பது குறித்து இதுவரை விவரங்கள் இல்லை எனக் கூறினார்.
 

click me!