பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை... 4 பேர் மீதும் பாய்ந்தது குண்டர் சட்டம்..!

Published : Mar 12, 2019, 11:01 AM IST
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை... 4 பேர் மீதும் பாய்ந்தது குண்டர் சட்டம்..!

சுருக்கம்

பொள்ளாச்சி இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க அம்மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். 

பொள்ளாச்சி இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க அம்மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார். 

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம் தமிழகத்தை உலுக்கியது. இதுதொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆண்டுகளாக இது போன்ற பல குற்றச்சமபவங்களை அரங்கேற்றி வந்தது தெரியவந்தது. இவர்களால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்தது. 

இந்நிலையில், முக்கியக்குற்றவாளியான திருநாவுக்கரசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய முதலில் உத்தரவிடப்பட்டது. பின்னர் சதீஷ், சபராஜன், வசந்தகுமார் ஆகியோரையும் குண்டர்சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.   

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்