திமுகவை கிழித்து தொங்க விட்ட பொள்ளாச்சி பெண்ணின் அண்ணன்!!

By sathish kFirst Published Mar 12, 2019, 10:31 AM IST
Highlights

அரசியல் ஆதாயத்துக்காக ஆளும் கட்சியை விமர்சிக்காதீங்க, உங்க சுயலாபத்துக்காக எங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு கேட்ட பெயரை ஏற்படுத்தாதீங்க என கூறியுள்ளது திமுகவினரை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் ஒருவர்தான் அந்த புகாரை அளித்தது. தன்னை சில இளைஞர்கள் பாலியல் வன்முறை செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி வருகிறார்கள் என்று புகார் அளித்து இருந்தார்.  அந்த கொடூர கும்பலை கைது செய்து விசாரித்ததில் பல திடுக் தகவல்கள் வெளியானது. இவர்கள் நண்பர்களின் உறவுக்கார பெண்கள், பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள், கல்லூரி படிக்கும் பணக்கார பெண்களை குறி வாய்வைத்து நேரிலும் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டு, நட்பாகி, பின் காதல் செய்து ஏமாற்றி இருக்கிறார்கள். காதலை காரணம் காட்டி பலவந்தமாக பலத்தாகரம் செய்துள்ளது விசாரணையில் தெரிந்துள்ளது அதுமட்டுமல்ல, அப்படி பெண்களுடன் உல்லாசம் இருக்கும் பொது வீடியோ எடுத்து மிரட்டி மிரட்டியே திரும்பாத திரும்ப வரவழைப்பார்களாம்.

இவர்களது போனில், சுமார் 1500 வீடியோக்கள் இருந்தது போலீசாரையே மிரளவைத்ததாம், தமிழகத்தில் க்ரைம் ஹிஸ்ட்ரியில் நடந்ததே இல்லை ஏன் இந்தியாவிலேயே இப்படி ஒரு க்ரைம் வாய்ப்பே இல்லை என கதிகலங்கிப்போனார்களாம்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? என மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னைப் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. என் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன்.

பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேச தயாராக இருக்கிறார்கள். இவ்விவகாரத்தை முதன் முதலாக வெளியே கொண்டு வந்ததே நான் தான். இதுகுறித்து நானே தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் பேசி இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் என்னை அணுகிய போது, நான் தான் அவர்களுக்கு தைரியம் சொல்லி காவல்துறையிடம் அனுப்பினேன். இதில், எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவில்லை. இப்போது புகார் அளித்திருக்கும் பெண் குடும்பத்திற்குக் கூட நான் தான் தைரியம் சொல்லி அனுப்பினேன்.

நாகராஜ் முன்பு எனக்கு யாரென்றே தெரியாது. அதன்பிறகு தான், அவன் அதிமுகவைச் சேர்ந்தவன் என்று தெரியவந்ததால், உடனே அவனை கட்சியில் இருந்து நீக்கினோம் என்றும், குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கவில்லை. அவர்களை தண்டிக்கவே விரும்புகிறது. பொள்ளாச்சி சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியிலிருந்து ஒருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எந்தஒரு விசாரணைக்கும் நானும், என்னுடைய குடும்பமும் தயார் என பேட்டியளித்தார்.

"

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில், ஒரு வீடியோ வெளியானது அதில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் அண்ணன் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும், திமுகவிற்கு அட்வைஸ் பண்ணும் சாக்கில் கிழி கிழியென கிழித்துத் தொங்கவிட்டுள்ளார். 

அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட அண்ணன் பேசுகிறேன்...  இந்த வழக்கு தொடர்வதற்கு உதவியாக இருந்தது அனைத்து கட்சியையும் சேர்ந்த நண்பர்கள் தான். இந்த வழக்கு சுயநலத்துக்காக போடல, என்னோட தங்கச்சி மாதிரி வேறு எந்த பெண்ணும் பாதிக்கப் படக் கூடாது அதான், நாங்க வழக்கு போட்டோம். என்னோட நண்பரின் அப்பா மூலம் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரிடம் நடந்ததை சொன்னோம், அவர் காவல்துறை மூலமா கடுமையான நடவடிக்கை எடுத்தாரு,  அவர்களை கைது பண்ணாங்க, இப்பூப்போவரைக்கும் அவங்களோட உதவியிலட தான் இருக்கோம்,  ஆளும் கட்சி சார்பில்  தான் எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். ஒரு சில அரசியல் விஷமிக்க ஆளும் கட்சியை சேர்ந்தவர்களை கடுமையா விமர்சிக்கிறாங்க. நேற்று தேர்தல் தேதி அறிவித்ததால் ஆளும் கட்சிக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் இப்படி விஷமித்தனம் செய்கிறார்கள். உங்களிடம் ஆதாரம் இருந்தால் போலீசில் கொடுங்க... முடிந்ததா அவங்களுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்க போராடுங்க அதை விட்டுவிட்டு எங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு எந்தவித கேட்ட பெயரையும் ஏற்படுத்தாதீங்க. இதுவரைக்கும் எங்களின் தங்கச்சி பெயர் வெளியில் வராமல் இருக்க அவங்க மீடியா நண்பர்களுக்கு நன்றி என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

இந்த வீடியோவில், அழுத்தம் திருத்தமாக அரசியல் ஆதாயத்துக்காக ஆளும் கட்சியை விமர்சிக்காதீங்க, உங்க சுயலாபத்துக்காக எங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு கேட்ட பெயரை ஏற்படுத்தாதீங்க என கூறியுள்ளது திமுகவினரை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். 

click me!