புரோட்டாவில் பாம்பு தோல்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி.. ஓட்டலுக்கு சீல்.

Published : May 06, 2022, 01:56 PM ISTUpdated : May 06, 2022, 02:04 PM IST
புரோட்டாவில் பாம்பு தோல்.. வாடிக்கையாளர்  அதிர்ச்சி.. ஓட்டலுக்கு சீல்.

சுருக்கம்

புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  இச்சம்பவம் கேரள மாநிலம்  காசர்கோட்டில் நடந்துள்ளது. 

புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  இச்சம்பவம் கேரள மாநிலம்  காசர்கோட்டில் நடந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிக்கன் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் பரோட்டாவில் பாம்பு தோல் வந்துள்ள சம்பவம் அம்மாநில மக்களை பீதி அடைய வைத்துள்ளது.

கேரள மாநிலம் சாகர் கோடு மாவட்டம் நெடுமங் கோட்டை அடுத்த பூவதுர் பகுதியை சேர்ந்தவர் பிரியா, இவர் அங்கு உள்ள ஓட்டல் ஒன்றில் புரோட்டா பார்சல் வாங்கினார். வீட்டிற்கு எடுத்துசு சென்று அதை சாப்பிட ஆசையாக பார்சலை பிரித்தார். அப்போது அந்த பார்சலில் பிரித்தபோது  அவரு பயங்கர அதிர்ச்சி அடைந்தார்.  பரோட்டாவில் பாம்பு தோல் இருப்பது  குறித்து அவர் நெடுமங்காடு காவல் துறையில் புகார் கொடுத்தார், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார், உடனே அந்த ஓட்டலுக்கு புறப்பட்டு வந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு நடத்தினர்.

பாம்பு தோல் இருந்த பார்சலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பொது மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் ஓட்டல்களில் அலட்சியம் காட்டப்படுவதை இதற்கு காரணம் என்றும், அந்த ஓட்டலில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக கடைபிடிக்கவில்லை என்றும் அதிகாரிகள் குற்றஞ்சாட்டினர். உணவு பாதுகாப்பு அதிகாரி குற்றம்சாட்டினர் பின்னர் கைது செய்தனர் நிலையில் புரோட்டாவின் பாம்பு தோல் இருந்ததை சிலர் படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது சமுதாயத்திற்கு வருகிறது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!