அகதி பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. சுவர் ஏறி குதித்து ஓடிய போலீஸ்.. சஸ்பெண்ட் செய்த எஸ்.பி..

Published : May 06, 2022, 12:22 PM ISTUpdated : May 06, 2022, 12:28 PM IST
அகதி பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. சுவர் ஏறி குதித்து ஓடிய போலீஸ்.. சஸ்பெண்ட் செய்த எஸ்.பி..

சுருக்கம்

பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகம் வந்து மண்படம் முகாமில் தங்கியிருந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்தக்கொண்ட காவலரின் செயல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.   

பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகம் வந்து மண்படம் முகாமில் தங்கியிருந்த கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்தக்கொண்ட காவலரின் செயல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வாழ வழியின்றி மக்கள் கடும் இன்னலை சந்தித்து வருகின்றனர். விலை வாசி உயர்வால், அத்தியாவசியமான பொருட்களை கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, பால் பவுடர் உள்ளிட்டவற்றிற்கு கடும் தட்டுபாடு நிலவுகிறது.

இதனால் இலங்கை தமிழ் மக்கள் ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து கடல்வழியாக படகுகள் மூலம் தமிழகத்திற்குள் அகதிகளாக நுழைந்து வருகின்றனர். இவ்வாறு தமிழகம் வருபவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுகிறது. இதுவரை 22 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர். 

மேலும் படிக்க: "உன்னை விட உன் தங்கை செமையா இருக்கா".. மச்சினியுடனான உல்லாசத்தை கண்டித்த மனைவி படுகொலை.!

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர், தனது இரண்டு குழந்தைகளுடன் ராமேஸ்வரம் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய, மரைன் போலீஸார் மண்டபம் முகாமில் தங்க வைத்த்துள்ளனர்.இந்நிலையில் தான் கடலோர பாதுகாப்புக் குழும காவலர் அன்பு என்பவர், அந்த பெண்ணிடம் செல்போன் நம்பர் வாங்கி அடிக்கடி போன் செய்து பேசி பழகி வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் முகாமில் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த காவலர் அன்பு, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். தொடந்து அந்த பெண் கூச்சலிடவே, அக்கம்பகத்தினர் ஓடி வந்துள்ளனர். இதற்குள் சுதாரித்து கொண்ட காவலர் அன்பு, சுவர் ஏறி குதித்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், மரைன் காவல்நிலைய ஏடிஎஸ்பி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். இதனையடுத்து தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட காவலர் அன்பு ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. கார்த்திக் காவலர் அன்புவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க: 90 வயது பாட்டியை உயிரோடு எரித்துக்கொன்ற பேத்திகள்..வெளிவந்த அதிர்ச்சி தகவல்.! இதுக்கா கொலை ?

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!