எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை... முன்ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியை கதறல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 19, 2021, 03:07 PM IST
எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை... முன்ஜாமீன் கோரி சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியை கதறல்...!

சுருக்கம்

பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.    இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.  

சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம்  கேளம்பாக்கத்திற்கு அருகே உள்ள தனியார் சர்வதேச உண்டு உறைவிடப் பள்ளியான சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள், பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டி புகார் அளித்தானர். இந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யபட்டார்.  
 மேலும் மாணவிகளை மூளை சலவை செய்ததாக பக்தை சுஷ்மிதா கைது செய்யப்பட்டுள்ளர். 


இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணைநடத்திவருகின்றனர்.  இந்நிலையில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் ஆங்கில ஆசிரியை தீபா வெங்கடராமன் என்பவர்  முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியில் சேர்ந்து தற்போது வரை பணியாற்றி வருவதாகவும், பாலியல் குற்றச்சாட்டு புகாரில் சிவசங்கர் பாபா கைது செய்யபட்டுள்ளார். 

இந்நிலையில் எனக்கு எதிராக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் சிபிசிஐடி காவல்துறையினர் போக்சா சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றது. எனக்கு எதிரான குற்றச்சாட்டு எந்த உண்மையும் இல்லை எனவே இந்த  வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் இதற்காக நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளேன் என தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..