மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தேர்வுக்கு உதவிக்கு வந்த ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!

By vinoth kumar  |  First Published Mar 15, 2023, 3:50 PM IST

தமிழகத்தில் 11ம் வகுப்பு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டு அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.


அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் 11ம் வகுப்பு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டு அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 1 அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், முசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி அரியர் தேர்வு எழுத தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகநாத் உதவ வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

அப்போது, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் ஜெகநாத்தை போலீசார் போக்சோவில் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். 

click me!