இந்த வயசுல இதெல்லாம் தேவையா! ரோட்ல போற பெண்ணிடம் ஆபாச சைகை! இழுத்து போட்டு பாலியல் தொல்லை கொடுத்த கிழவன்.!

By vinoth kumar  |  First Published Jan 6, 2023, 11:32 AM IST

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் நீண்ட காலமாக பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி அண்ணாநகர் புது மண்டபம் ரோடு வழியாக நடந்து சென்றுக்கொண்டிருந்தார். 


நடுரோட்டில் ஆபாச சைகை காட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 62 வயது கிழவன் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அதே பகுதியில் நீண்ட காலமாக பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி அண்ணாநகர் புது மண்டபம் ரோடு வழியாக நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அந்த பெண்ணை வழிமறித்து ஆபாசமாக பேசி, ஆபாச செய்கை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்

இதனையடுத்து, போதையில் இருந்த முதியவரை கீழே தள்ளிவிட்டு தப்பிச்செல்ல முயற்சித்த போது அந்த முதியவர் அங்கு கிடந்த கல்லை எடுத்து அந்த பெண்ணின் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர், அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் அண்ணாநகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த கரிகாலன் (62) எனத் தெரியவந்தது. இதையடுத்து கரிகாலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- மைத்துனியை மடக்க நினைத்த தங்கையின் கணவர்.. உல்லாசத்துக்கு வர மறுத்ததால் நடுரோட்டிலே கதறவிட்ட சம்பவம்..!

click me!