மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர்.. சிக்கியது எப்படி? வெளியான பரபரப்பு தகவல்..!

By vinoth kumar  |  First Published Jan 5, 2023, 2:18 PM IST

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (33). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பபிதா (32). 10 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 


வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியதை கண்டித்ததால், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தூக்கத்தில் இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னை தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (33). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பபிதா (32). 10 ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ம் தேதி பபிதா குழந்தைகளுடன் மணலியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து, மறுநாள் ஜனவரி 1ம் தேதி நந்தகுமார் தனது நண்பர்களுக்கு சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர், நண்பர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனையடுத்து நந்தகுமார் மனைவி பபிதாவுக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அதன்படி, அவர் இரவு 7 மணிக்கு பபிதா தனது குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் காலி மது பாட்டில்கள், சிகரெட் துண்டுகள், சைடிஷ்கள் சிதறி கிடந்துள்ளது. இதை பார்த்து  கோபம் அடைந்த பபிதா, வீட்டில் நண்பர்களுடன் மது அருந்தியது தொடர்பாக கணவனை கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற கணவர் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தூக்கத்தில் இறந்ததாக நாடகமாடியுள்ளார். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பபிதாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை பபிதா கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, நந்தகுமாரை பிடித்து விசாரித்தபோது, மது போதை தகராறில் மனைவியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மனைவியை கணவரே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!