கன்னியாகுமரி மாவட்டம் மாலன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ரசல்ராஜ்(60). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மாலன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ரசல்ராஜ்(60). இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, ரசல் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து ஆட்டோவில் ஏற்றியுள்ளார்.
இதையும் படிங்க;- தனியாக இருந்த ஆசிரியை வீடு புகுந்து கதற கதற பலாத்காரம்.. குற்றவாளி சிக்கியது எப்படி தெரியுமா?
இதனையடுத்து, அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் நியாயம் கேட்பதற்காக ரசல்ராஜிடம் இதுகுறித்து போய் கேட்ட தகாத வார்த்தைகளினால் திட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- ஹாலிவுட் பட பாணியில் நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள்.. தூக்கி வீசப்பட்ட 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி..!
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர் ரசல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.