மேடம் எங்களுக்கு ஓயாமல் பாலியல் டார்ச்சர் கொடுக்குறாரு.. கதறிய அரசு பள்ளி மாணவிகள்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்!

By vinoth kumar  |  First Published Nov 10, 2023, 12:51 PM IST

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். 


அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 8ம் தேதி நெல்லை மாநகர காவல் துறை சார்பாக அப்பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடத்தப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம்.. கல்லா கட்டிய பிசினஸ்.. உள்ளே புகுந்து தொக்காக தூக்கிய போலீஸ்..!

அப்போது நிகழ்ச்சி முடிவில் தனியாக வந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் அங்குள்ள காவல் துறை உயர் அதிகாரியிடம் அப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாகவும் அடிக்கடி தொந்தரவு தருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் பள்ளியில் பணியாற்றக்கூடிய ஆசிரியர் ஜோசப் செல்வின் (59) புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க;- வேறு வழியில்லாமல் பெற்ற மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை நாடகம்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்..!

 இறுதியில் மாணவர்கள் அளித்த புகார் உண்மை என்று தெரியவந்ததை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். ஆசிரியரே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!