
மதுபோதையில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 41 வயதான எலக்ட்ரீசீயன். இவர் கடந்த மார்ச் 13ம் தேதி குடிபோதையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிறுமி தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார்.
இதையும் படிங்க;- நான் உன்னால தான் மூணு மாசம் கர்ப்பமா இருக்கேன்! கல்யாணம் பண்ணிக்கோ! டார்ச்சர் செய்த காதலியை கொன்றேன் பகீர்
இதனால், அதிர்ச்சி அடைந்த தாய் இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இதில், குற்றம்சாட்ட சிறுமியின் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். இந்த வழக்கு 68 நாளில் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு மறுத்த பெண்.. தலைக்கேறிய காமத்தால் 65 வயது கிழவன் செய்த செயல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!