தூங்கிக்கொண்டிருந்த அண்ணியை பார்த்து ஏங்கிய கொழுந்தன்.. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

By vinoth kumar  |  First Published Apr 13, 2022, 12:49 PM IST

அரியலூர் அருகே உள்ள பூண்டியை சேர்ந்த கந்தசாமி மகன் முருகானந்தம் (38). திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரதி அழகி(32). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. முருகானந்தம் தம்பி ரமேஷ்(32), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 


தூங்கிக்கொண்டிருந்த அண்ணியை பலாத்காரம் செய்ய முயன்ற கொழுந்தனை உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பலாத்காரம் முயற்சி

Tap to resize

Latest Videos

அரியலூர் அருகே உள்ள பூண்டியை சேர்ந்த கந்தசாமி மகன் முருகானந்தம் (38). திருச்சி சமயபுரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ரதி அழகி(32). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை, ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. முருகானந்தம் தம்பி ரமேஷ்(32), கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அண்ணன், தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். 

இதையும் படிங்க;- அண்ணன் வெளிநாட்டுக்கு சென்ற கேப்பில் அண்ணியை கரெக்ட் செய்த கொழுந்தன்.. ஏற்காட்டு ரூமில் நடந்த ஏடாகுடம்.!

அலறி கூச்சல்

நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் ரமேஷ், தனது அண்ணியை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து அலறி சத்தம் போட்டு கொண்டே வீட்டை விட்டு ரதி அழகி வெளியே ஓடி வந்து விட்டார். இது தொடர்பாக ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால்  2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

கொலை

இதில் கீழே விழுந்த ரமேஷை அருகில் கிடந்த உலக்கையால் அண்ணன் முருகானந்தம் கடுமையாக தாக்கியுள்ளார். இதில்,  படுகாயமடைந்து ரத்த வெள்ளதத்தில் சரிந்தத ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முருகானந்தத்தை தேடி வருகின்றனர். அண்ணியை பலாத்காரம் செய்ய முயன்ற கொழுந்தன் அண்ணால் அடித்து கொலை செய்தத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  "உனது மனைவியுடன் நான் நெருக்கமாக இருக்க போட்டோ இருக்கு".. மிரட்டிய அமமுக நகர செயலாளரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

click me!