நாமக்கல் மாவட்டம் காரைக்குறிச்சி புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.
அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் காரைக்குறிச்சி புதூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆசிரியர் ராமமூர்த்தி மாணவிகளுக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட கள்ளக்காதலி.. ஆத்திரத்தில் துடிதுடிக்க கொன்ற வாலிபர்.. நடந்தது என்ன?
இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் ஒன்றாக திரண்டு பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சக ஆசிரியர்கள் ராமமூர்த்தியை பள்ளியில் ஒரு அறையில் பாதுகாப்பாக பூட்டி வைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மாமியாருடன் உல்லாசம்! கடுப்பான மருமகன்! ஜெயிலர் பட பணியில் செய்த தரமான சம்பவம்.!
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியர் ராமமூர்த்தியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து பெற்றோர்களை சமாதானம் செய்து அறையில் இருந்த ஆசிரியர் ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.