Sexual Harassment: 4 மாதங்களாக 13 மாணவிகளுக்கு ஓயாமல் பாலியல் தொல்லை.. சிக்கிய ஆசிரியர்.. எப்படி தெரியுமா?

By vinoth kumar  |  First Published Nov 29, 2023, 3:16 PM IST

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் கருணாகரன் அப்பள்ளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் கருணாகரன் அப்பள்ளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்திற்கு தெரியவந்ததை அடுத்து பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். 

Tap to resize

Latest Videos

undefined

பின்னர், பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்த 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகளை அழைத்து நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதனையடுத்து மொத்தம் 14 மாணவிகள் ஆசிரியர் கருணாகரன் தங்களிடம் தீய தொடுதலில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் கருணாகரனிடம் விசாரணை நடத்தியபோது பள்ளி மாணவிகளுக்கு கடந்த 4 மாதமாக பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் ஆசிரியர் கருணாகரன் (32) மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

click me!