நகைப்பட்டறையில் இருந்து 6 அரை கிலோ தங்கம் திரவம் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நகை பட்டறையில் பணியில் ஈடுபட்டிருந்து 6 வடமாநிலத்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நகைப்பட்டறையில் தங்க திரவம் கொள்ளை
கோவையில் நகைக்கடை ஒன்றில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், தற்போது சென்னையில் உள்ள நகை பட்டறையில் இருந்து Gold Liquid திருடப்பட்டப்ப சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள தியாகராய நகர் ராமேஸ்வரம் ரோடு பகுதியில் வசிப்பவர் நந்தகுமார் ஜக்தாப்.(43).சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்துக் கொண்டு தரைத்தளத்தில் நகை கடைகளில் உள்ள பழைய நகைகளை வாங்கி உருக்கி 24 கேரட் புதிய நகைகளாக மாற்றிக் கொடுக்கும் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
undefined
நேற்று முன் தினம் இரவு பட்டறை அலுவலகத்தை மூடிவிட்டு அலுவலகத்தில் வேலை செய்யும் ஆறு நபர்கள் மட்டும் உள்ளே தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை நந்தகுமார் நகை பட்டறைக்கு வந்து பார்த்தபோது அலுவலகத்தில் இருந்த 6 கிலோ 400 கிராம் Gold Liquid காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
குற்றவாளிகள் யார்.?
இதனையடுத்து சிசிடிவி பதிவை பார்த்தபோது முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டு உள்ளே வரும் அடையாளம் தெரியாத ஒரு நபர் அலுவலக கதவின் பூட்டை உடைக்காமல் உள்ளே வந்து Gold Liquid ஐ வாட்டர் கேனில் பிடித்து திருடி செல்வது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் நந்தகுமார் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை பட்டறை ஊழியர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த அஸ்வின் உத்தம்( 22) கர்நாடகாவைச் சேர்ந்த ராகுல்( 18) மகாராஷ்டிராவை சேர்ந்த மாதேவ் ( 32), ரோகித்( 22) அனில்( 30), விநாயக்( 22) ஆகிய 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
தஞ்சை குடியிருப்பு வாசிகளே உஷார்; வீட்டில் இருந்த தாய், மகளிடம் குல்லா கொள்ளையர்கள் செயின் பறிப்பு