உடன் பணியாற்றும் பெண்ணுடன் உல்லாசம்.. உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி. கள்ளக் காதலி பயங்கர முடிவு.

Published : Apr 11, 2022, 05:41 PM IST
உடன் பணியாற்றும் பெண்ணுடன் உல்லாசம்.. உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி. கள்ளக் காதலி பயங்கர முடிவு.

சுருக்கம்

அப்போதுதான் சோம்நாத்துடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவரின் அறிமுகம் இவரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது, சோமநாத்தை காதலித்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன் மனைவியும் அவர்களைத் தொடர்ந்து கள்ளக்காதலியும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் தன் உடன் வேலை செய்யும் பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்ததை அறிந்த அவரின் மனைவி உயிரிழந்தார். பின்னர் அதை தாங்க முடியாமல் கணவனும் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தன்னால் இரண்டு உயிர்கள் போய்விட்டதே என்ற மன உளைச்சல் கள்ளக்காதலியும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த துயர சம்பவம் ராய்ச்சூரில் நடந்துள்ளது.

ராய்ச்சூர் தெர்மல் சென்டரில்  ஆர்டிபிஎஸ் பெண் பொறியாளர் பார்வதி (30) ஆர்டிபிஎஸ் காலனி நிறுவனத்தின் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சக்தி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொறியாளர் பார்வதி இறந்த அறையில் தற்கொலை கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் ஆர்டிபிஎஸ்  நிறுவனத்தில் சக பொறியாளரான சோமநாத் 32 என்பவருடன் தனக்கு  திருமணத்துக்கு  புறம்பான தொடர்பு இருந்ததாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த சோமநாதன் மனைவி வேதா (29) கணவனுடன் கோபித்துக் கொண்டு ஜனவரி 14 அன்று பால் கோட்டில் உள்ள தனது தாய் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத என்ஜினீயர் சோமநாத்தும் ஜனவரி 21-ஆம் தேதி ஆர்டிபிஎஸ் காலனியில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான காதலி பார்வதியும் கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். பார்வதியின் குடும்ப பின்னணி இதைவிட சோகமானது. ராய்ச்சூரைச் சேர்ந்த பார்வதியின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தனர். இவருக்கு ஒரே ஆறுதலாக இருந்த இவரது மூத்த சகோதரர் ஆர்டிபிஎஸ்சில் பணிபுரியும் போது திடீரென உயிரிழந்துவிட்டார். அண்ணன் இறக்கும்போது பார்வதி பிடெக் நிறைவு செய்து இருந்தால் கருணை அடிப்படையில் அவருக்கு அங்கு பணி வழங்ப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே பணி நியமனம் பெற்றார். இங்கு ஜூனியர் என்ஜினியராக அவர் பணியாற்றி வந்தார்.

அப்போதுதான் சோம்நாத்துடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. அவரின் அறிமுகம் இவரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது, சோமநாத்தை காதலித்ததால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்துள்ளது. தங்கள் காதலால் காதலன் சோம்நாத்தின் மனைவி தற்கொலை செய்து கொண்டார் என்றும், அதை தாங்கிக்கொள்ள முடியாமல் சோம் நாத்தும் தற்கொலை முடிவை எடுத்ததாகவும் அவரின் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை நான் சோம்நாத்தை நேசித்தேன், அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது, என் அந்த மரண குறிப்பில் பார்வதி எழுதியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!