3 சிறுமிகளை கற்பழித்த முன்னாள் ராணுவ வீரர் அதிரடி கைது!

Published : Sep 17, 2018, 11:41 AM ISTUpdated : Sep 19, 2018, 09:27 AM IST
3 சிறுமிகளை கற்பழித்த முன்னாள் ராணுவ வீரர் அதிரடி கைது!

சுருக்கம்

மத்தியப்பிரதேசத்தில் தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் தனியார் சிறுவர்கள் காப்பகத்தில் நடந்த பாலியல் பலாத்காரத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அரசு நிதி பெறும் காப்பகம் ஒன்று 1995-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் இந்த காப்பகத்தை நடத்தி வருகிறார். இதில் 42 சிறுவர்கள் மற்றும் 58 சிறுமிகள் தங்கியுள்ளனர். 

இந்நிலையில் பல்வேறு புகார் எதிரொலியால் காப்பகம் மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். 
இதைத்தொடர்ந்து காப்பகங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் குறிப்பிட்ட காப்பகத்தில் உள்ள சிறுமிகள் மற்றும் சிறுவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது காப்பகத்தின் உரிமையாளரால் நீண்ட காலமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. 

மேலும் 3 சிறுவர்கள் பலியாகியுள்ள அதிர்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது. இது குறித்து அந்த காப்பகத்தில் உள்ள சக மாணவர்கள் பல்வேறு புகார் அளித்துள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதற்கட்ட நடவடிக்கையாக அந்த காப்பகத்தின் உரிமையாளரான 70 வயது ராணுவ வீரரை போலீசார்ர் கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!