30 வயது பெண் ஒருவரின் வயிற்றில் 12 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை அடுத்துள்ள தாமரச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் ஹர்சீனா. இவருக்கு 30 வயதாகிறது.
ஹர்சீனாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பிறகு 2017 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததையடுத்து ஹர்சீனாவுக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டு வைத்தியம் எடுத்து வந்துள்ளார்.
மேலும் மருத்துவரிடம் அணுகிய போது, அவர்கள் மாத்திரைகொடுத்துள்ளனர். இருப்பினும் தொடர்ச்சியாக வயிற்றில் வலி ஏற்பட்டு வருகிறது என்று வேறொரு மருத்துவரை அணுகியபோது, அவர்கள் ஸ்கேன் எடுக்க கூறியுள்ளார்.
இதையும் படிங்க..வெறும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பிறகு ஸ்கேன் செய்து எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றுக்குள் சுமார் 12 சென்டி மீட்டர் நீளம் கொண்ட கத்தரிக்கோல் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிறகு ஹர்சீனாவுக்கு உடனடியாக மீண்டும் அறுவை சிகிச்சை செய்து வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோலை வெளியே எடுத்தனர் மருத்துவர்கள்.
பிறகு இச்சம்பவம் குறித்து ஹர்சீனா அளித்த புகாரின் பேரில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவு அளித்துள்ளார். ஹர்சீனாவுக்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக