மருமகள் கண்முன்னே நிர்வாணம்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா குழந்தையும் சொத்து தருகிறேன் கூறி மாமனார் சில்மிஷம்.!

By vinoth kumar  |  First Published Oct 11, 2022, 3:24 PM IST

குழந்தை இல்லாத மருமகளிடம் ஆசைவார்த்தை கூறி செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனார் மற்றும் உடந்தையாக இருந்த மாமியார் மீது போலீசார் 4  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்


குழந்தை இல்லாத மருமகளிடம் ஆசைவார்த்தை கூறி செக்ஸ் டார்ச்சர் கொடுத்த மாமனார் மற்றும் உடந்தையாக இருந்த மாமியார் மீது போலீசார் 4  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

ஈரோடு  மாவட்டம் கதிரம்பட்டி வடக்கு தோட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி பிரியா (42). கல்லூரி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர், ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். எனக்கு 2011 மார்ச் 6ம்  தேதி திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. கடந்த மாதம் 13ம் தேதி நானும், எனது கணவரும் கதிரம்பட்டியில் உள்ள வீட்டிற்கு சென்றபோது, அங்கிருந்த மாமனார் ரங்கசாமி, மாமியார் செல்லம்மாள்  ஆகியோர் என்னை தாக்கினர். அடுத்த நாள் நான் வீட்டில் இருந்தபோது எனது மாமனார் தன்னை அரை நிர்வாணப்படுத்திக்கொண்டு எனது கையைப்பிடித்து இழுத்தார். ஒன்றாக இருந்தால் குழந்தையும், சொத்தும் தருவதாக ஆசை வார்த்தை என்னை அடைய நினைத்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- சிறுவனை மடக்கி உல்லாசம்.. கடத்தி திருமணம் செய்த கல்லூரி மாணவி.. 3 மாத கர்ப்பத்தால் அதிர்ச்சி..!

இதைப்பார்த்து கொண்டு இருந்த எனது மாமியார் கண்டு காணாமல் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நான், எனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த விபரத்தை கூறினேன். அவர் விரைந்து வந்து தந்தையை கண்டித்தார். அவரையும் எனது மாமனார் மிரட்டினார். எனது மாமனார்  என்னிடம் அநாகரீமாக நடந்து கொண்டது செல்போனில் வீடியோ ஆதாரமாக உள்ளது. என் கணவரை மிரட்டிய ஆதாரமும் உள்ளது. எனவே, எனக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாமனார் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மாமியார் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என புகார் மனுவில் கூறி உள்ளார். 

இது குறித்த புகாரின்பேரில், ஈரோடு மகளிர் போலீசார் மாமனார் ரங்கசாமி, மாமியார்  செல்லம்மாள் ஆகியோர் மீது பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை செய்தல் உட்பட 4  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- அந்த பெண்ணை விட்று.. அவள் உனக்கு தங்கச்சிடா .. காதல் ஜோடியை பிரிக்க பாஜக Ex MLA, ஊர் பெரியவர்கள் டார்ச்சர்

click me!