57 வயதான பெட்டிக்கடைக்காரர்... 2 ஆண்டுகளில் 59 பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்... அதிரவைக்கும் தகவல்..!

Published : Jul 15, 2019, 05:38 PM IST
57 வயதான பெட்டிக்கடைக்காரர்... 2 ஆண்டுகளில் 59 பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம்... அதிரவைக்கும் தகவல்..!

சுருக்கம்

கேரளாவில் கடந்த 2 வருடங்களாக 59 பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பெட்டிக்கடைக்காரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கேரளாவில் கடந்த 2 வருடங்களாக 59 பள்ளி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பெட்டிக்கடைக்காரரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பட்டாம்பி திருத்தலா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (57). இவர் அரசு பள்ளி அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு பள்ளி மாணவ, மாணவிகள் மிட்டாய் வாங்க வருவது வழக்கம். இந்த மாணவிகளை கிருஷ்ணன் கடைக்குள் அழைத்து சென்று மிரட்டி சில்மிஷத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளார். குறிப்பாக 6, 7-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவிகளை அதிகமாக சீரழித்துள்ளார். இதில் ஒரு மாணவி வகுப்பு ஆசிரியையிடம் கதறிய படி நடந்ததை கூறியுள்ளார். அப்போது, இந்த விவகாரம் பாலக்காடு பகுதியில் பூதாகரமாக வெடித்தது.

 

இதுகுறித்து அந்த ஆசிரியை குழந்தைகள நல அமைப்பிடம் புகார் செய்தனர். குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரித்தபோது, கடந்த 2 வருடமாக கிருஷ்ணன் 59 மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு தொல்லை செய்து வந்தது தெரியவந்தது. பின்னர், இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெட்டிக்கடைக்காரர் கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அடங்காத 26 வயது அண்ணி சாந்தி.. தீராத வெறியில் இருந்த கொழுந்தன்.. இறுதியில் நடந்த அலறல் சத்தம்.!
அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?