அம்மா ஆபாச படம் காட்டி என்ன நாசம் பண்ணிட்டாம ஒருத்தன்.. தாயிடம் கதறிய மகள்..!

By vinoth kumar  |  First Published Feb 7, 2023, 2:14 PM IST

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வெள்ளகுளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் மணிகண்டன்(29). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். 

ஆபாச படங்களை காண்பித்து பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வெள்ளகுளம் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் மணிகண்டன்(29). லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், அந்த மாணவியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியான முள் தோப்புக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் தனது செல்போனில் வைத்திருந்த ஆபாச படங்களை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று மணிகண்டன் மிரட்டி மாணவியை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், நடந்த சம்பவம் தொடர்பாக தாயிடம் மகள் கூறியுள்ளார். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய்  திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!