இன்ஸ்டாகிராமில் பழகி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த மாணவன்.. மகள் கர்ப்பத்தால் கதறி துடித்த பெற்றோர்.!

Published : Jan 09, 2022, 07:46 AM IST
இன்ஸ்டாகிராமில் பழகி பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த மாணவன்.. மகள் கர்ப்பத்தால் கதறி துடித்த பெற்றோர்.!

சுருக்கம்

சென்னை அம்பத்தூர் அருகே பாடி தேவர் நகரில் வசித்து வரும் தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் சென்னை முகப்பேரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர், சிறுமிக்கு கடுமையான வயிற்று பலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். 

சென்னையில் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொடர்பு காரணமாக ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் 

சென்னை அம்பத்தூர் அருகே பாடி தேவர் நகரில் வசித்து வரும் தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் சென்னை முகப்பேரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சிறுமிக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர், சிறுமிக்கு கடுமையான வயிற்று பலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். 

அப்போது, பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறினர்.இதுபற்றி மருத்துவமனையிலிருந்து கொடுத்த தகவலின்படி கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இன்ஸ்டாகிராம் மூலம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த  கல்லூரி மாணவர் சஞ்சய்(20) என்பவருடன் சிறுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதமாக அவர்கள் இடையே நீடித்த நட்பு காரணமாக இரண்டு மாதத்துக்கு முன் சஞ்சய் பாடிக்கு வந்துள்ளார். பின்னர் சிறுமி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு சென்னை முழுவதும் சுற்றியதாக தெரிகிறது. பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று இருவரும் மீறியது தெரியவந்தது. இதனால், சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து,  பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் சஞ்சய்யை தீவிரமாக தேடி வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?