81 வயது கிழவன் உட்பட பள்ளி மாணவியை ஒருவர் பின் ஒருவராக சீரழித்த கொடூரம்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!

Published : Jan 11, 2022, 01:31 PM IST
81 வயது கிழவன் உட்பட பள்ளி மாணவியை ஒருவர் பின் ஒருவராக சீரழித்த கொடூரம்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!

சுருக்கம்

செஞ்சி அருகே 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மாணவி அண்ணன், 80 வயது கிழவன் உள்ளிட்ட 8 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

செஞ்சி அருகே 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மாணவி அண்ணன், 80 வயது கிழவன் உள்ளிட்ட 8 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஈச்சங்குப்பம் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி தாய்-தந்தையை இழந்த நிலையில் தனது பெரியம்மா ஆதரவில் வளர்ந்து வருகிறார். இவர் விக்கிரவாண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, உடனே  முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மருத்துவர்கள் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (81), இளையராஜா (28), மோகன் ஆகியோரை கைது செய்தனர். இதில், மோகன் மாணவிக்கு அண்ணன் உறவு முறையாவார். இந்த பாலியல் பலாத்கார வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவத்துக்கு மாணவியின் பெரியம்மா குப்புவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இந்த சம்பவத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (25), பிரபு (37), பாபு (22), சத்யராஜ் (28) ஆகியோரும் மாணவியை பலாத்காரம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்ததாக கருணாநிதி மனைவி குப்பு என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் செஞ்சி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!