இளம் பெண்ணை கற்ப்பழிக்க முயன்ற ஊழியர்... கள்ளக்காதலியை தூக்கிய போலீஸ்!! விசாரணையில் நடந்த பகீர்

Published : Aug 18, 2019, 11:59 AM IST
இளம் பெண்ணை கற்ப்பழிக்க முயன்ற ஊழியர்...  கள்ளக்காதலியை தூக்கிய போலீஸ்!! விசாரணையில் நடந்த பகீர்

சுருக்கம்

போலீஸ் ஸ்டேஷனாவுக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட பெண் ஒருவர் விசாரணையின் போது போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் ஸ்டேஷனாவுக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட பெண் ஒருவர் விசாரணையின் போது போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின்நிலைய வளாகத்தில் பயர் மேனாக பணிபுரிந்து வருபவர் கிறிஸ்டோபர். இவர் கடந்த மாதம் 17ம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் வந்துக் கொண்டிருந்த பொழுது, அவ்வழியாக வந்த பள்ளிச்சிறுமியை வலுக்கட்டாயமாக தொட்டுப்பேசி, கற்பழிக்க முயன்றதாக வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. 

இந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் இதற்குப் பொறுப்பு இன்ஸ்பெக்டராக வள்ளியூர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அனிதா பணியாற்றி வந்த நிலையில், பொறுப்பு இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையிலான வள்ளியூர் அனைத்து மகளிர் ஸ்டேஷனில் கிறிஸ்டோபர் மீது பொக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவனை கடந்த சில வாரங்களாகத் தேடி வந்தனர். 

இந்நிலையில், தலைமறைவான கிறிஸ்டோபரின் தொடர்புகளை ஆராய்ந்த காவல் நிலையத்தார், அவன் அடிக்கடி கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள கருங்கல் பூமத்திவிளைப் பகுதியை சேர்ந்த இஸ்ரவேல் மனைவி லீலாபாயுடன் பேசி வந்தது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு தகாத உறவு உள்ளது தெரியவந்தது.

இதனால், சனிக்கிழமையன்று லீலாபாயை விசாரணைக்கு வள்ளியூர் அனைத்து மகளிர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துள்ளனர் இன்ஸ்பெக்டர் அனிதா தலைமையிலான போலீசார் டீம். நள்ளிரவு நேரத்தில் நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையின் போது, எங்கே கிறிஸ்டோபர்? என  அடித்து துன்புறுத்தியதால், லீலாபாய் அடி தாங்க முடியாமல், திடீரென ரத்தம் கக்கி இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. என்ன செய்வது என தெரியாமல் திணறிய அனைத்து மகளிர் போலீசார் இறந்த லீலாபாயை தூக்கிக்கொண்டுஆசாரி பள்ளம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். விசாரணையின் போது லாக்கப்பில் பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!