தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒரு பட்டியலின மாணவன் வீடு புகுந்து தாக்குல்

By Velmurugan s  |  First Published Aug 18, 2023, 10:19 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவனை சக மாணவர்கள் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் என்பவரது மகன் ஹரிபிரசாத்(வயது 17).  இவர் பட்டியலின  வகுப்பினை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. ‌கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி  11ம் வகுப்பு (கணக்குப்பதிவியல்) படித்து வருகிறார். 

அதே பள்ளியில் கழுகுமலையைச் சேர்ந்த ராஜகுரு (17),  ஷேமந்த் குமார் (17)  ஆகியோர் 11ம் வகுப்பு அறிவியல் பாட பிரிவில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளிக்கு வெளியே ராஜகுரு,  ஹேமந்த் குமார் இருவரும் வெளியே சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மாணவர் ஹரி பிரசாத் இருவரும் சண்டை போடுவதை தடுத்ததாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

திரைப்பட சூட்டிங்கிற்காக கூறி அச்சடித்த கள்ள நோட்டு.! காய்கறி கடையில் கொடுத்து மாற்றிய கும்பல்- வெளியான தகவல்

இந்நிலையில் ராஜகுரு 10 பேரை அழைத்துக்கொண்டு நேற்று இரவில் லெட்சுமிபுரம் சென்று ஹரி பிரசாத்தை ஜாதி ரீதியாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஹரி பிரசாத் காயம் அடைந்தார்.  அவரது செல்போன் முற்றிலுமாக சேதம் அடைந்தது. காயம் அடைந்த ஹரிபிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கழுகுமலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நாங்குநேரி பள்ளியில் பட்டியலின வகுப்பினை  சேர்ந்த மாணவர் மற்றும் அவரது தங்கை தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கழுகுமலையில் பட்டியலின  மாணவர் மீது ‌மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

click me!