எஸ்பிஐ ஏடிஎம் நூதன கொள்ளையில் அதிரடி திருப்பம்... 3வது கொள்ளையனையும் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 28, 2021, 11:12 AM IST
Highlights

 3வது நபரையும் சென்னை அழைத்து வந்த பின்னர், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்மிட்டுள்ளனர். 

சென்னையில் வேளச்சேரி, தரமணி, வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட வங்கி கிளைகளிலும் வடமாநில கொள்ளையர்கள் ரூ.48 லட்சம் வரை கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நூதன கொலையானது கேஷ் டெபாசிட் இயந்திரங்களில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை பயன்படுத்தி அரங்கேற்றப்பட்டது. இது குறித்து அடுத்தடுத்த வந்த புகாரால் சுதாரித்துக் கொண்ட போலீசார், கொள்ளையர்கள் சென்னையை விட்டு தப்பியிருக்கக்கூடும் என்ற அடிப்படையில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். 

3 நாட்கள் தங்கியிருந்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கும் கொள்ளையர்கள் வட மாநிலத்தவராக இருக்க கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த கொள்ளை கும்பல் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கடந்த 19 மற்றும் 20ம் தேதிகளில் இருசக்கர வாகனத்தை வாடிக்கைக்கு எடுத்த இவர்கள் சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ஹரியானா விரைந்த தனிப்படை போலீசார், கடந்த 23ஆம் தேதி அமீர் என்பவர் ஹரியானாவில் கைதானார்இதையடுத்து அமீரின் கூட்டாளி வீரேந்தர் ராவத் என்பவரை நேற்று முன் தினம் கைது செய்த போலீசார், நேற்று சென்னை அழைத்து வந்தனர். 

தற்போது ஹரியானா போலீசாரின் உதவியுடன் மேலும் ஒரு கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரியானாவின் மேவாட் பகுதியில் பதுங்கியிருந்த 3வது நபரையும் கைது செய்துள்ளனர். இந்த நபர் பற்றிய தகவல்களை போலீசார் பாதுகாப்பாக வைத்துள்ளனர். 3வது நபரையும் சென்னை அழைத்து வந்த பின்னர், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்மிட்டுள்ளனர். அப்படி செய்யும் பட்சத்தில் கொள்ளை கும்பல் குறித்து கூடுதல் தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!