மற்ற ஆண்களை வைத்து சந்தியாவின் உடம்பில் பச்சை குத்திய கணவன்... தாயார் கதறல் பேட்டி!!

Published : Feb 06, 2019, 07:47 PM ISTUpdated : Feb 07, 2019, 11:36 AM IST
மற்ற ஆண்களை வைத்து சந்தியாவின் உடம்பில் பச்சை குத்திய கணவன்... தாயார் கதறல் பேட்டி!!

சுருக்கம்

குப்பைக் கிடங்கில் துண்டு துண்டாக வீசிக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்தில், அப்பெண்ணைக் கொலை செய்தது அவரது கணவர் பாலகிருஷ்ணன் என தெரிய வந்ததையடுத்து, மீளா துயரத்தில் உள்ள அப்பெண்ணின் தாயார், குற்றவாளி மருமகனுக்கு கடும்  தண்டனை வழங்க வேண்டும் என  தெரிவித்து  உள்ளார். 

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கண்டெடுக்கப்பட்டன. வேறு எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை.

பெண்ணின் கையில் இருந்த டாட்டூவை வைத்து, அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. 

இது குறித்து சந்தியாவின் தாய் தெரிவிக்கும் போது, 

என் மகளை துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற பாலகிருஷ்ணனுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.என் மகள் கையில் பச்சை குத்தியதை வைத்துதான் காவல்துறைக்கு அடையாளம் காட்டினேன்.
கிறிஸ்துமஸ் கொண்டாட ரூ.75ஆயிரத்துடன் என் மகளும், அவரது கணவரும் சென்னை சென்றனர். ஆனால் தன் மகளை இப்படி கொடூரமாக கொலை செஞ்சிட்டானே என கதறிய சந்தியாவின் தாய், ”மற்ற ஆண்களை வைத்து சந்தியாவின் உடம்பில் பாலகிருஷ்ணன் பச்சை குத்துவதாக என் மகள் என்னிடம் தெரிவித்தார். முடி வளர வளர மொட்டையடித்து விடுவதாகவும் கூறுவார். 

அவரது, நகைகளை பாலகிருஷ்ணன் அடகு வைத்துவிடுவார். செலவுக்கு பணமும் நான் கொடுத்து அனுப்புவேன். ஒரு கட்டத்தில் கணவருடன் வாழ முடியவில்லை என விவாகரத்து கேட்டு தூத்துக்குடி மகளிர் ஆணையத்தில் சந்தியா புகார் அளித்தார்.  

இதனையடுத்து சமாதானம் செய்து வைத்தேன், பின்னர் இருவரும் சென்னை வந்தனர். இங்கு வந்த பிறகு பாலகிருஷ்ணன் வேலைக்குச் செல்லாமல், சந்தியாவை வேலைக்கு அனுப்பினார். ஒருநாள் எனக்கு தொடர்பு கொண்டு, சந்தியா வெளிநாட்டுக்கு  சென்றுவிட்டார் என சொன்னார் பாலகிருஷ்ணன். ஆனால் இப்படி கொடுமைப்படுத்தி கொன்றது எனக்குத் தெரியாது என்று வேதனைத் தெரிவித்தார்.  

PREV
click me!

Recommended Stories

தாய் தந்தையைக் கொன்று ரம்பத்தால் துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய மகன்!
பேருந்தில் இவ்வளவு பேர் இருக்கும் போதே ஸ்ரீதர் செய்த வேலை.. கண்ட இடத்தில் கை வைத்ததால் பதறிய பள்ளி மாணவி