சின்ன சின்ன பசங்க 5 பேரு சேர்ந்து ரவுடியை கொத்துக்கறி போட்ட கொடூரம்..!! - கெத்துக்காக போட்டுத்தள்ளியதாக பகீர் வாக்குமூலம்..!!

Published : Oct 31, 2019, 12:00 PM IST
சின்ன சின்ன பசங்க 5 பேரு சேர்ந்து ரவுடியை கொத்துக்கறி போட்ட கொடூரம்..!! - கெத்துக்காக போட்டுத்தள்ளியதாக பகீர் வாக்குமூலம்..!!

சுருக்கம்

குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெருந்துறைமுருகன், சத்தியலிங்கம் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் கொலை நடந்தபோது அந்த பகுதியில் செல்போனில் யாரெல்லாம் பேசினார்கள்?, கொலையான அழகுமுருகுன், கடைசியாக யாரிடம் செல்போனில் பேசினார்? என்ற கோணத்திலும் போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.  

சென்னை பாடி புதுநகர் 13 வது தெருவை சேர்ந்தவர் அழகு (எ) அழகுராஜ்/27, ஆன் லைன் உணவு விற்பனையகத்தில் டெலிவரிபாயாக வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த 1 மாதகாலமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.   இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம்  வீட்டில் உணவு அருந்திவிட்டு வீட்டின் அருகே உள்ள மெடிக்கல் ஷாப் அருகே நின்று கொண்டு இருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது இரு சக்கரவாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அழகுவை சராமாரியாக தலை மற்றும்கழுத்தில் வெட்டியுள்ளனர். 

இதில் மூளை சிதறி இரத்தவெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெஜெ நகர் போலிசார் உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையுண்ட அழகுராஜ் கடந்த 2014ஆம் ஆண்டு சிவலிங்கம் என்பவரை கொலை செய்த வழக்கில்  முக்கிய குற்றவாளியாக சிறைக்கு சென்றுவந்தவர். மேலும்  பாடி புதுநகரில் யார் கெத்து என்பதில் அங்குள்ள வாலிபர்கள் இடையே   போட்டி நிலவி வந்ததாகவும் இதன் காரணமாக   கொலை நடந்ததா  என்ற பல்வேறு  கோணத்தில் ஜெஜெ நகர் காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர்.


கொலை குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பெருந்துறைமுருகன், சத்தியலிங்கம் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் கொலை நடந்தபோது அந்த பகுதியில் செல்போனில் யாரெல்லாம் பேசினார்கள்?, கொலையான அழகுமுருகுன், கடைசியாக யாரிடம் செல்போனில் பேசினார்? என்ற கோணத்திலும் போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பர் மீது போலிசாருக்கு சந்தேகம் எழுந்தது. போலிசாரின் சந்தேகப்படியே மோகன் குடும்பத்துடன் தலைமறைவானது போலிசாரின் சந்தேகத்தை உறுதி செய்தது. 

மோகனை போலிசார் தேடிவந்த நிலையில் பாடி லூகாஸ் மேம்பாலம் அருகே  பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தை அடுத்து மோகன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தபோது, புதுநகரை சேர்ந்த மோகன் (24), டெனியல் (19), தமிழ்செல்வன்(17) ,சரண் (எ) பச்சை கிளி (17), அம்பத்தூர் சேர்ந்த விக்னேஷ் (16) என்ற மூன்று சிறுவர்களும் இந்த கொலையில் ஈடுப்பட்டது தெரிந்தது. மேலும் மோகன் என்பவருக்கும் அழகுமுருகன் என்பவருக்கும் தாதா பிரச்சினை நீண்ட காலமாக நடந்து வந்தது. இந்த நிலையில்தான், ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சியில் மோகனை அழகுமுருகன் தாக்கியுள்ளார். அந்த கோபத்தில் அழகு முருகனை மோகன், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிந்தது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!