பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை..!

Published : Feb 14, 2019, 10:34 AM IST
பிரபல ரவுடி கொடூரமாக வெட்டிக்கொலை..!

சுருக்கம்

வேலூர் அருகே பிரபல ரவுடி கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வேலூர் அருகே பிரபல ரவுடி கொடூரமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அடிக்கடி ரவுடிகளுக்குள் மோதல் ஏற்படுவதும், அதில் யாராவது ஒருவர் கொலை செய்யப்படுவதும், அதற்கு பழிவாங்க மீண்டும் கொலை செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த பிரச்சனையில் போலீசார் கண்டு காணாமல் இருந்து வருகின்றனர். குற்றாளியை கைது செய்துவிட்டு பின்னர் அமைதியாகிவிடுகிறது. இதனால் ரவுடிகளின் அட்டகாசம் நாளு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் வேலூரில் சைதாப்பேட்டையை சேர்ந்தவன் ரவுடி தமிழரசன். 25 வயதான இவன் மீது காவல்துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. நேற்று சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் நந்தியாலம் பாலத்தின் அருகே கழுத்து அறுப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை செய்யப்பட்ட ரவுடி தமிழரசனின் தாய்மாமனான பிச்சைபெருமாளை சத்துவாச்சாரி-காங்கேயநல்லூர் பாலாற்றில் முகத்தை சிதைத்து கொடூரமாக கொல்லப்பட்டார்.  பிரபல ரவுடி வீச்சு தினேஷ் கும்பலுக்கும் தமிழரசனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது என்றும் இதன் காரணமாக தமிழரசன் கொல்லப்பட்டு இருக்கலாம் என காவல் துறையினர் தரப்பில் சந்தேகிக்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்