போலீஸு ஜென்மத்துக்கும் மறக்க முடியாத சம்பவம்!! கசாப்பு கடைகரனை மிஞ்சிய மோகன்ராமின் பகீர் பயோடேட்டா...

By sathish kFirst Published Oct 14, 2018, 12:27 PM IST
Highlights

சன் டே காலையில் கசாப்பு கடையின் மரக்கட்டையில் கோழியை கொத்துக்கறி போடுவதை பார்த்திருக்கீர்களா? தாறுமாறாக அசைவம் சாப்பிடுபவனுக்கும் கூட அந்த காட்சி குமட்டிக் கொண்டு வரும். காரணம்? உள்ளேயிருக்கும் கருணைதான். 

’இந்த பொழப்புக்கு இவரு பிச்சை எடுத்து சாப்பிடலாம்!’என்று அந்த கசாப்பு கடைக்கார் மீது ஆத்திரமும் வரலாம் உங்களுக்கு. 

ஆனால் அந்த கொத்துக்கறியை விட மிக மோசமாக மூன்று நபர்களை சிதைத்த கூலிப்படை தலைவனை என்னவென்று சொல்வீர்கள்!? அவர்தான் ‘மோகன்ராம்’. 

அதிகமில்லை ஜென்டில்மென், இவர் மேல் வெறும் 40 கொலை - கொள்ளை வழக்குகள்தான் அவர் மேலே இருக்குது!: தமிழக போலீஸை அலறவிட்டுக் கொண்டிருக்கும் மோகன்ராம் பற்றிய ஒன்லைன் விசிட்டிங் கார்டு இது. 
அப்படியானால் அவருடையை பகீர் பயோடேட்டா எப்படியிருக்கும்? என்று வாய் பிளப்பவர்களுக்காக அதன் ஹைலைட் ஹிண்ட்ஸை கீழே தருகிறோம்...

*    மோகன்ராமின் சொந்த ஊர்  தென்னிந்தியாவுக்கே ரெளடிகளை உருவாக்கிக் கொடுக்கும் தமிழகத்தின் திண்டுக்கல்தான். 

*    இவரது குரு, தமிழக போலீஸை கலங்கவிட்ட மெட்ராஸ் பாண்டி. 

*    பொதுவா திண்டுக்கல் ரெளடிங்க கத்தி, அருவா பயன்படுத்துறதுல கில்லாடிங்க. ஆனால் சின்ன வயசுலேயே குறி பார்த்து கல்லு எறியுறதுல மோகன் கிங். 

*    இதனாலேயே மெட்ராஸ் பாண்டி, கள்ள துப்பாக்கி ஒன்னை வாங்கிக் கொடுத்து மோகன் ராமை துப்பாக்கி சுட கத்துக்க வெச்சார்.

*    நாட்டு ரக கள்ளத்துப்பாக்கியின் மெக்கானிசத்துல மெய் மறந்த மோகன், கூகுள்ள படிச்சு படிச்சே ஆசியா கண்டத்துல புழங்குற எல்லா ரக துப்பாக்கிகளையும் பயன்படுத்த கத்துக்கிட்டார். அதுலேயும் அவற்றை பிரிச்சு மேய்ஞ்சு அசெள்ம்பிள் பண்ற அளவுக்கு வளர்ந்தார்.

*    தன் குரு மெட்ராஸ் பாண்டியின் கொலைக்கு காரணமானவனை திண்டுக்கல் சப் ஜெயில் வாசல்லேயே நெத்திப் பொட்டுல சுட்டு மோகன் வீழ்த்துன சம்பவம் போலீஸு ஜென்மத்துக்கும் மறக்க முடியாத சம்பவம். 

*    மோகன் ராம் கையில ஒரு ராட்வீலர் நாய் இருந்துச்சு. மோகன் ராமை நோக்கி எறும்பு ஊர்ந்து வந்தாலும்  கூட அதை கவனிச்சு, அவரை அலர்ட் பண்றதுதான் அதன் வேலையே. அதனால அந்த நாய் மேலே உயிரையே வெச்சிருந்தார் மோகன். 

*    கோயமுத்தூர்ல வெச்சு மோகனை கிட்டத்தட்ட நூறு போலீஸ்காரங்க சுற்றி வளைச்சப்ப, ரெண்டு மணி நேரம் போராடி போலீஸை நெருங்க விடாமல் பண்ணுச்சு அந்த ராட்வீலர். இரும்பு தடியால் அடியும், வெட்டும் வாங்கியும் அதன் ஆட்டம் தீரலை. கடைசியில் மோகன்ராம் போட்ட ஒரு ஆர்டரில் அது அடங்கி, நகர்ந்துச்சு. அப்புறம்தான் போலீஸால் மோகனை பிடிக்க முடிஞ்சுது. 

*     எத்தனை முறை சிறைக்குள்ளே போனாலும், ஜாமீன் வாங்கிட்டு மோகன்ராம் வெளியில் வர்றது மிகப்பெரிய அதிசயம். இதற்கான விடை, மோகன்ராமோட ‘சேவை’ பல அரசியல் தலைவர்களுக்கு தேவை. 

*    இதையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் கவுரவத்துக்காகத்தான் பெரும்பாலான கொலைகளை மோகன் பண்ணியிருக்கார். 
- இப்போ கோயமுத்தூர் சிறையிலிருக்கும் மோகன்ராம் எப்போ, எப்படி வெளியில் வரப்போறார்? அப்படிங்கிறதுதான் சுவாரஸ்யமே.

click me!