திருந்தீட்டா மட்டும் விட்ருவோமா? 4 ஆண்டுகளுக்கு பின் பிரபல ரௌடி வெட்டி படுகொலை; பழிக்கு பழியாக 3வது கொலை

Published : Sep 09, 2023, 11:04 AM ISTUpdated : Jul 19, 2024, 11:47 PM IST
திருந்தீட்டா மட்டும் விட்ருவோமா? 4 ஆண்டுகளுக்கு பின் பிரபல ரௌடி வெட்டி படுகொலை; பழிக்கு பழியாக 3வது கொலை

சுருக்கம்

புதுவையில் 4 ஆண்டுகளாக திருந்தி வாழ்ந்து வந்த பிரபல ரௌடியை பழிக்கு பழியாக சிலர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அடுத்த சோலைநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரௌடி மணிமாறன். இவர்  மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ரௌடிகள் பட்டியலில் மணிமாறன் இருந்தார். இந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு அன்பு ரஜினி என்பவர் கொலை செய்யபட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிமாறன், முத்தியால்பேட்டை பகுதியை காலி செய்து விட்டு கிராம பகுதியான மடுகரை பகுதியில் வசித்து வந்தார். 

இந்த நிலையில் காரில் வந்த 5 பேர் கும்பல், மணிமாறனை இன்று வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. இது குறித்து தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

ஜெயிலர் படம், வெப் சீரிஸ் மாதிரி இதையும் கொஞ்சம் பாருங்க; மாணவர்களுக்கு கனிமொழி அட்வைஸ்

காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அன்பு ரஜினி கொலை சம்பவத்திற்கு பிறகு, மணிமாறன் எந்த குற்ற சம்பவத்திலும் ஈடுபடாமல் மடுகரையில் அமைதியாக வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையில் அன்பு ரஜினி கொலைக்கு பழிக்கு பழியாக அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு இன்று மணிமாறனை கொலை செய்து உள்ளனர். 

சிறுவனின் உயிரைக் குடித்த உறியடி திருவிழா; சோகத்தில் மூழ்கிய ஒட்டுமொத்த கிராமம்

மேலும் அன்பு ரஜினி கொலை சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யபட்டனர். அதை தொடர்ந்து 3-வதாக மணிமாறன் கொலை செய்யபட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை சிறப்பு அதிரடிபடை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!